அடிநா அழற்சி

அடிநா அழற்சி என்பது அடிநாச் சதைகளில் ஏற்படும் ஒரு நோய்த்தாக்கம், அது அடிக்கடி தொண்டைப் புண் மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் ஆனால் எப்போதும் அவ்வாறு செய்யாது.

அடிநா அழற்சி
Enlarged, red tonsils and exudative white patches of tonsillitis
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புகுடும்ப மருத்துவர்
ஐ.சி.டி.-10J03., J35.0
ஐ.சி.டி.-9463
நோய்களின் தரவுத்தளம்13165
Patient UKஅடிநா அழற்சி
MeSHD014069

வகைகள்

இரு வகையான அடிநா அழற்சிகள் இருக்கின்றன: கடுமையானது மற்றும் நீடித்திருப்பது. கடுமையான அடிநா அழற்சி தோற்றத்தில் நுண்மங்கள் சார்ந்தவையாகவோ நச்சுக்குரியதாகவோ இருக்கலாம். குறைந்த கடுமை அடிநா அழற்சி நோய்க்கிருமி ஆக்டினோமைசெஸ் ஆல் ஏற்படுகிறது. நீடித்திருக்கும அடிநா அழற்சி, சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால் நீண்ட காலத்துக்கு நீடித்திருக்கக்கூடியவை, இவை பெரும்பாலும் நுண்கிருமி சார்ந்த தொற்றுநோயினால் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்

அடிநா அழற்சியின் நோய் அறிகுறிகளில் உள்ளடங்குபவை தீவிரமான தொண்டைப் புண் (காதுகளுக்கு குறிப்பிடப்பட்ட வலியாக ஏற்படலாம்), வலியுடன்/கடினமான விழுங்குதல், இருமல், தலைவலி, தசைபிடிப்பு நோய் (தசை வலிகள்), காய்ச்சல் மற்றும் குளிர்நடுக்கம். அடிநா அழற்சி சிவந்த, வீங்கிய அடிநாச் சதையால் குறிப்பிடப்படுகிறது, அதில் சீழ்க்குரிய கசிவு வெள்ளைத் திட்டுகளின் மேற்பூச்சாகக் காணப்படும் (அதாவது சீழ்). கண்கள், முகம் மற்றும் கழுத்தில் வீக்கங்கள் ஏற்படலாம்.
சில நிலைமைகளில் அடிநா அழற்சியின் நோய் அறிகுறிகள், பேச்சு வழக்கில் இது மோனோ (அமெரிக்கா) அல்லது கிளாண்டுலார் ஃபீவர் (மற்றஇடங்களில்) என்றழைக்கப்படும் ஈபிவி இன்ஃபெக்ஷியஸ் மோனோநியூக்ளியோசிஸ் நோய் அறிகுறிகளுடன் குழப்பிக்கொள்ளப்படும். சுரப்பிக்குரிய காய்ச்சலுக்கான பொதுவான நோய் அறிகுறிகளில் அடங்குபவை பசியின்மை, பெரிதாகிய மண்ணீரல், பெரிதாகிய நிணநீர் கணுக்கள் மற்றும் தீவிரமான தொண்டைப் புண், சிலநேரங்களில் சீழ் கசிவின் திட்டுகளும் உடனிருக்கும்.

ஒவ்வொரு நபரும் நோய் அறிகுறிகளை வெவ்வேறாக அனுபவிப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியதும் அவசியமாகும். நுண்கிருமிகளால் ஏற்படும் நிலைமைகளில் அடிக்கடி தோல் வெடிப்பு மற்றும் முகஞ்சிவத்தல் பின்தொடரும். நச்சு கிருமிகளால் ஏற்படும் அடிநா அழற்சி, ஒழுகும் மூக்கு அல்லது வலிகள் மற்றும் உடல்முழுவதும் வலி போன்ற சளிக்காய்ச்சல்-மாதிரியான நோய் அறிகுறிகளை உருவாக்கும். நோய்த்தாக்கம் உடனடியாக குணமடையாத போதிலும் அடிநா அழற்சி நோய் அறிகுறிகள் வழக்கமாக சிகிச்சை தொடங்கிய 2 அல்லது 3 நாட்களில் மேம்படும்.

கடுமையான அடிநா அழற்சி நுண்ணுயிரிகள் மற்றும் நச்சுக்கிருமி இரண்டினாலும் ஏற்படுகிறது, மேலும் அது விழுங்கும்போது காது வலி, துர் நாற்றம் மற்றும் ஜொள்ளுடன் கூடிய தொண்டைப் புண் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகளைக் கொண்டிருக்கும். இந்த நிலையில் அடிநாச் சதையின் மேற்புறம் நல்ல சிவப்பு நிறமாக இருக்கும் அல்லது சாம்பல்நிற வெள்ளை மேற்பூச்சைக் கொண்டிருக்கும், அதே நேரத்தில கழுத்தில் இருக்கும் நிணநீர் கணுக்கள் வீக்கமடைந்திருக்கும். [1] கடுமையான அடிநா அழற்சியின் மிகப் பொதுவான வடிவமாக இருப்பது ஸ்ட்ரெப் தொண்டை, இதை தோல் வெடிப்பு, சளிக் காய்ச்சல் மற்றும் காது நோய்த்தாக்கம் போன்ற நோய்அறிகுறிகள் பின்தொடரலாம். இந்தக் குறிப்பிட்ட அடிநா அழற்சி இடர்ப்பாட்டுக்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இதய வால்வுகள் மற்றும் சிறுநீரகங்கள் சேதமடையும் பாதிப்பினை ஏற்படுத்தும். நிணநீர் கணுக்கள் மற்றும் மூக்கு அடிச்சதை வளர்ச்சி பெரிதாவதுடன் இந்த நிலைமைகளில் உச்சநிலையிலான சோர்வு மற்றும் மனஉலைவு கூட ஏற்படும்.

நீடித்திருக்கிற அடிநா அழற்சி என்பது அடிநாச் சதையில் இருக்கும் ஒரு பிடிவாதமான நோய்த்தாக்கமாகும். இந்த நோய்த்தாக்கம் மீண்டும் மீண்டும் ஏற்படுவதால், அடிநாச் சதையில் சிறு பள்ளம் அல்லது குழி உண்டாகி அதில் நுண்கிருமி தங்கிவிடும். அடிக்கடி சிறிய துர்நாற்றமுடைய கற்கள் (டான்ஸில்லோலித்ஸ்) இந்தச் சிறு பள்ளங்களில் காணப்படுகின்றன, இவை உயர் அளவிலான சல்ஃபாவால் உருவாக்கப்படுகிறது. இந்தக் கற்கள் முழுத் தொண்டை அல்லது தொண்டையின் பின்புறத்தில் ஏதோவொன்று சிக்கிக்கொண்ட அறிகுறிகளை ஏற்படுத்தும். அழுகின முட்டையைப் போன்ற வாசனையுடைய (சல்ஃபா காரணமாக) அருவருப்பான சுவாசம் கூட இந்த நிலைமைக்கான ஒரு நோய் அறிகுறி. அடிநா அழற்சியின் காரணமாக அதனுடன் பொதுவாகத் தொடர்புடைய இதர நோய் அறிகுறிகளில் குறட்டைவிடுதல் மற்றும் அமைதிகுலைந்த தூக்க முறைகள் ஆகியவையும் அடங்கும். அடிநாச் சதை பெரிதாகி தொண்டையின் இதரப் பகுதிகளுக்கு இடையூறு ஏற்படுத்தத் தொடங்கியதும் இந்த நிலைமைகள் உருவாகின்றன. இந்த வகையான நோய் காரணமாக ஒரு நபரின் குரல் பொதுவாக பாதிகப்படுகிறது, மேலும் ஒரு நபர் வழக்கமாகக் கொண்டிருக்கும் குரலின் தொனியை மாற்றிவிடுகிறது. ஒரு நபருக்குத் தொண்டை கரகரப்பு மட்டுமே ஏற்படலாம், ஆனால் அடிநாச் சதையில் வீக்கம் இருக்கும்போது அல்லது வெப்பமூட்டத்துடன் இருக்கும்போது தொண்டை அதிகமாகக் பயன்படுத்தப்பட்டால் குரல்வளை அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அடிநா அழற்சியுடன் ஏற்படும் இதர பொதுவற்ற நோய் அறிகுறிகளில் வாந்தி, மலச்சிக்கல், உரோமம் ஒட்டிக்கொண்டதாக அல்லது பஞ்சுபோன்று இருப்பதாக உணரும் நாக்கு, வாய் திறப்பதில் கடினம், தலைவலிகள் மற்றும் உலர்ந்த அல்லது பஞ்சடைத்த வாய் போன்ற உணர்வு ஆகியவை அடங்கும்.

காரணங்கள்

சாதாரண சூழ்நிலைகளின் கீழ், நச்சுக்கிருமிகள் மற்றும் நுண்கிருமிகள் மூக்கு மற்றும் வாய் வழியாக உடலுக்குள் நுழையும்போது அவை அடிநாச் சதையில் வடிகட்டப்படுகிறது. அடிநாச் சதை அவற்றை வெள்ளை இரத்த செல்களால் சூழ்ந்துகொள்வதன் மூலம் வேலை செய்கிறது, இது உடலில் காய்ச்சல் உருவாவதற்கான காரணமாக ஆகிவிடுகிறது, அது சிறுவர்களிடத்தில் மிக அதிகமாக உயர்ந்துவிடக்கூடும். நோய்த்தாக்கம் மிகத் தீவிரமாக ஆனால் அடிநாச் சதை வெப்பமடைந்து அதிக நோவுடையாதாகிவிடும். இந்த நோய்த்தாக்கம் தொண்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கூட நிலைகொண்டு அடித்தொண்டையில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.[2] தொண்டையின் பின்புறத்தில் இருக்கும் இந்தப் பகுதிதான் குரல் பெட்டி மற்றும் அடிநாச் சதைக்கு இடையில் அடங்கியிருக்கிறது.

அடிநா அழற்சி வகை A ஸ்ட்ரெப்டோகோக்கல் நுண்கிருமி யால் ஏற்படலாம்,[3] இது ஸ்ட்ரெப் தொண்டை விளைவை ஏற்படுத்தும்.[3] நச்சுக்குரிய அடிநா அழற்சி பின்வரும் பல்வேறு நச்சுக்கிருமிகளால்[3] ஏற்படலாம், அவை எப்ஸ்டீன்-பார் நச்சுக்கிருமி[3] (தொற்றுகிற ஒற்றை உட்கருஅணுமிகைப்புக்கு காரணம்)[4] அல்லது அடினோவைரஸ்.[3]

சிலநேரங்களில், அடிநா அழற்சி ஸ்பிரோசேயிடா மற்றும் ட்ரிபோனெமாவின் நோய்த்தாக்கத்தினால் ஏற்படுகிறது, இந்த நிலைமை வின்சென்ட்ஸ் ஆஞ்சினா அல்லது ப்ளோட்-வின்சென்ட் ஆஞ்ஜினா என்று அழைக்கப்படுகிறது.[5]

அடிநா அழற்சி தொற்றுநோயுடன் தொடர்புகொண்டிருந்தாலும், வீக்கம் மற்றும் இதர நோய் அறிகுறிகள் தொற்றிப் பரவக்கூடிய விளைவுகளாலேயே ஏற்படுகிறது அல்லது இந்த விளைவுகளின் உபசரிக்கும் நோய்பாதிக்காத எதிர்ச்செயல்களால் ஏற்படலாம். அடிநா அழற்சி, நாசாபாரிங்க்ஸின் வழக்கமான நுண்கிருமிக்குரிய மலர்தலுக்கு சுற்றித்திரியும் நோய்த்தடுப்புகளின் எதிர்ச்செயல்களின் விளைவாக இருக்கலாம்.

அடிநா அழற்சியை ஏற்படுத்தும் நச்சுக்கிருமிகள்தான் சுவாசத்துக்குரிய அமைப்பு அல்லது சுவாசத்தை அடிக்கடி பாதிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பெரும்பாலான நிலைகள் நச்சுக்கிருமிகளால் ஏற்படுகிறது மேலும் அவற்றுக்குத் தொண்டை அழற்சிக்கான சிகிச்சை மட்டுமே தேவைப்படும், அவற்றை மருந்து கடைகளிலேயே வாங்கமுடியும். எனினும் நுண்கிருமி ஏற்படுத்திய அடிநா அழற்சி மேலும் கடுஞ்சிக்கல் ஏற்படாமல் தடுப்பதற்கு நோய்எதிர்ப்பு மருந்துமாத்திரைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. அடிநா அழற்சி பெரும்பாலும் குழந்தைகளைத் தாக்குகின்றன, இவர்களின் அடிநாச் சதைகள் நோய்த்தாக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்குப் பொறுப்பாளியாக இருக்கிறது. இதுவும் கூட உண்மைதான் ஏனெனில் நம் வயது ஏற ஏற நம் அடிநாச் சதைகளின் செயல்பாடு குறைந்துவிடுகிறது. பூஞ்சை அல்லது ஒட்டுண்ணிகள் காரணமாயிருக்கும் அரிய நோய் நிலைகளும் கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுவாக நலிவுற்ற நோய் எதிர்ப்பு அமைப்பு கொண்டிருக்கும் நபர்களிடத்தில் ஏற்படுகிறது.

புகைபிடிப்பதால் அடிநா அழற்சி ஏற்படுகிறது என்பதைக் குறிப்பதற்கு எந்த ஆராய்ச்சியும் கிடையாது, எனினும் புகைப்பிடிப்பது நோய் எதிர்ப்பு அமைப்பை பலவீனப்படுத்துகிறது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் புகை-ஏற்படும் சுற்றுச்சூழலில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உள்நாக்கு வெட்டு ஏற்படுவதற்கான காரணிகளுக்கு உட்படலாம்.

சிகிச்சை

அடிநா அழற்சிக்கான சிகிச்சைகளில் வலிக் கட்டுப்பாட்டு மருத்துவங்கள் [6] மற்றும் சர்க்கரை கலந்த மருந்து மாத்திரைகள் ஆகியவை அடங்கும்.[7] அடிநா அழற்சி நுண்கிருமியால் ஏற்பட்டிருந்தால் அப்போது ஆண்டிபையாடிக்ஸ் பரிந்துரைக்கப்படுகிறது, இதில் பென்சிலின் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[8] பென்சிலின் ஒவ்வாமை கொண்டிருக்கும் நோயாளிகளிடத்தில் எரித்ரோமைசின் மற்றும் கிளாரித்ரோமைசின் பயன்படுத்தப்படுகிறது.

அடிநா அழற்சியின் பல நிலைமைகளில், வீக்கமேற்பட்ட அடிநாச் சதை ஏற்படுத்தும் வலிக்குத் தற்காலிக தீர்வாக தாக்குதலுக்குட்பட்ட இடத்திற்கான அனெஸ்தெடிக்ஸ் அவசியமாகிறது. இந்த நோக்கத்திற்காக விஸ்கோஸ் லிடோகெய்ன் கரைசல்கள் அவ்வப்போது பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் பென்ஸோகேய்ன், லிக்னோகேய்ன், பென்ஸிடாமைன் மற்றும் ஃப்ளூபிஃபரோஃபென் அடங்கியிருக்கும் தொண்டை மயக்கமருந்து மாத்திரைகள் மருத்துவர் பரிந்துரையில்லாமலேயே பரவலாகக் கிடைக்கப்பெறுகிறது.

இபூப்ரூஃபென் மற்றும் ஆஸ்பிரின் அல்லது பாராசெடாமால் போன்ற வலியுணர்வின்மைகள் வீக்கம் மற்றும் நீர்க்கட்டுதலைக் குறைக்க உதவிசெய்யும், இது வலியைக் குறைத்து விரைவிலேயே நோயாளிகள் திரவங்களை விழுங்க அனுமதிக்கும்.[6]

அடிநா அழற்சி ஒரு நச்சுக்கிருமியால் ஏற்படுமானால், நோய்வாய்ப்படுதலின் நீட்டிப்பு அதில் ஈடுபட்டுள்ள நச்சுக்கிருமியைச் சார்ந்திருக்கிறது. வழக்கமாக ஒரே வாரத்திற்குள் முழுமையான உடல் நலம் பெற்றுவிடும்; எனினும், சில அரிதான நோய்த்தாக்கங்கள் இரு வாரங்கள் வரை நீடித்திருக்கும்.

நீடித்திருக்கிற நிலைமைகளில் டான்ஸில்லெக்டோமி (அடிநாச் சதையை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்குதல்) சிகிச்சைக்கான ஒரு தேர்வாக அமையும்.[9].

கூடுதலாக, வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் உப்புக் கரைசலைக் கொப்பளிப்பது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்.[10] நீங்கள் டான்ஸில்லோலித்தால் (அடிநாச் சதைக் கற்கள்) அவதிப்பட்டுக்கொண்டிருந்தால் பால், ஐஸ்க்ரீம், தயிர் முதலான பால்பொருட்களைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

கடுஞ்சிக்கல்கள்

நோய்த்தாக்கத்தின் போது அடிநாச் சதையின் பக்கவாட்டில் சீழ்க்கட்டி ஏற்படலாம், இது வழக்கமாக அடிநா அழற்சி ஏற்பட்ட பல நாட்கள் கழிந்தபின்னர் உருவாகும். பெரிடான்சிலார் அப்ஸ்செஸ் (அல்லது குய்ன்ஸி) என்று கூறப்படுகிறது. அபூர்வமாக, இந்த நோய்த்தாக்கம் அடிநாச் சதையையும் தாண்டி பரவலாம், இது உள்ளுக்குள்ளான கழுத்துப்பெரு நாளங்களில் நோய்த்தாக்கம் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தி லெமியர்ரெஸ் சிண்ட்ரோம் செப்டிகேமியா நோய்த்தாக்கத்தின் பரவலை அதிகரிக்கும்.

நீடித்திருக்கிற/மீண்டும் ஏற்படுகிற நிலைமைகளில் (பொதுவாக முந்தைய ஆண்டில் அடிநா அழற்சியின் ஏழு நிகழ்வுகள், முந்தைய இரண்டு ஆண்டுகள் ஒவ்வொன்றிலும் ஐந்து நிகழ்வுகள் அல்லது முந்தைய மூன்று ஆண்டுகள் ஒவ்வொன்றிலும் மூன்று நிகழ்வுகள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது),[11][12][13] அல்லது விழுங்குவதே பலவீனமடையும் அளவுக்கு பாலாடைன் அடிநாச் சதை வீக்கம் கொண்டிருக்கும் கடுமையான நிலைமைகளில், அடி நாச் சதையை நீக்குவதற்கு டான்ஸில்லெக்டோமி நிகழ்த்தப்படலாம். அடிநாச் சதை நீக்கப்பட்ட நோயாளிகள் மீதமுள்ள தங்கள் நோய் எதிர்ப்பு அமைப்புகளால் கண்டிப்பாக இன்னமும் நோய்த்தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.

அடிநாச் சதையில் இருக்கும் குழிகளில் ("க்ரிப்ட்கள்" என்று குறிப்பிடப்படுகிறது) சேர்ந்தவிட்ட சளியை உணவாகக்கொள்ளும் நுண்ணுயிர், டான்ஸில்லோலித்கள் என்று அறியப்படும் வெள்ளை கலந்த மஞ்சள் வண்டலை உருவாக்கக்கூடும். விரைவில் ஆவியாகிவிடும் இயல்புள்ள கந்தக கலவைகளின் இருப்பின் காரணமாக இவை நாற்றத்தை வெளிப்படுத்தும்.

அடிநாச் சதையின் வழக்கத்துக்கு மாறான பெரிதாக்கம், குறட்டைவிடுதல், வாய்வழி சுவாசித்தல், நிம்மதியற்ற தூக்கம் மற்றும் தடங்கலான தூக்க சுவாச நிறுத்தம் ஆகிய விளைவை ஏற்படுத்தும், அவ்வாறான நேரங்களில் நோயாளி சுவாசம் செய்வதை நிறுத்திவிடுகிறார் மேலும் ரத்த ஓட்டத்தில் இருக்கும் பிராணவாயுவின் அளவில் குறைவு ஏற்படுகிறது. இதற்கு டான்ஸில்லெக்டோமி பயனளிக்கக்கூடியதாக இருக்கும்.

மிக அபூர்வமான நிலைமைகளில், கீல்வாதக் காய்ச்சல்[14] அல்லது க்ளோமெருலோனெப்ரிடிஸ்[15] ஏற்படக்கூடும். இந்தச் சிக்கல்கள் வளர்ச்சிபெற்ற நாடுகளில் மிகவும் அபூர்வமாக இருக்கிறது, ஆனால் ஏழை நாடுகளில் அது தொடர்ந்து ஒரு முக்கியச் சிக்கலாகவே இருக்கிறது.[16][17]

மேலும் பார்க்க

  • டான்சில்லோலித்

குறிப்புதவிகள்

  1. அடிநா அழற்சி மற்றும் மூக்கு அடிச்சதை வளர்ச்சி நோய்த்தாக்கம் மெடிசன்நெட். மீட்டெடுக்கப்பட்டது 25-01-2010.
  2. அடிநா அழற்சி மேலோட்டப்பார்வை மெட்லைன் பிளஸ். மீட்டெடுக்கப்பட்டது 25-01-2010
  3. Putto A (1987). "Febrile exudative tonsillitis: viral or streptococcal?". Pediatrics 80 (1): 6–12. பப்மெட்:3601520.
  4. Renn CN, Straff W, Dorfmüller A, Al-Masaoudi T, Merk HF, Sachs B (2002). "Amoxicillin-induced exanthema in young adults with infectious mononucleosis: demonstration of drug-specific lymphocyte reactivity". Br. J. Dermatol. 147 (6): 1166–70. doi:10.1046/j.1365-2133.2002.05021.x. பப்மெட்:12452866. -தொண்டை நோய்த்தாக்கம் மற்றும் லிம்பாடெனோபதிக்காக அமாக்சிசில்லின் கொடுக்கப்பட்ட நான்கு நோயாளிகளை ரென் ஆய்வுசெய்தார். எப்ஸ்டீன்-பார் ஆண்டிபாடிகளின் சுவடினால் நோயாளியின் இரத்தத்தில் தொற்றிப் பரவும் ஒற்றை உட்கருஅணுமிகைப்பு இருந்தது. மேற்கொள்ளப்பட்ட மூன்று பரிசோதனைகள் பாட்ச்ட் சோதனை, இன்ட்ராகுடேனியஸ் சோதனை மற்றும் லைம்போகைட் டிரான்ஸ்ஃபார்மேஷன் சோதனை. பாட்ச்ட் பரிசோதனையின் முடிவுகள் நான்கு நோயாளிகளில் ஒருவருக்கு அவர்கள் தோல் வெடிப்பு காரணமாக இருந்தது. இன்ட்ராகுடேனியஸ் நான்கில் இரு நோயாளிகள் அமாக்சிசிலினைக் குறிக்கும் உடன்பாடான முடிவைக் காட்டியது. எல்டிடி முடிவுகள் நான்கில் மூவருக்கு அமாக்சிசிலின் குறித்த முடிவுகளைக் காட்டியது.
  5. Van Cauwenberge P (1976). "[Significance of the fusospirillum complex (Plaut-Vincent angina)]" (in Dutch; Flemish). Acta Otorhinolaryngol Belg 30 (3): 334–45. பப்மெட்:1015288. - ஃப்யூசோஸ்பிரில்லியம் காம்ப்ளெக்ஸ் (ப்ளௌட்-வின்சென்ட் ஆன்ஜினா) வான் கௌவென்பெர்ஜ் நேரடி நுண்ணோக்கி பரிசோதனையைப் பயன்படுத்தி 126 நோயாளிகளின் அடிநாச் சதையை ஆராய்ந்தார். முடிவுகள், 40% கடுமையான அடிநா அழற்சி வின்சென்ட்ஸ் ஆஞ்ஜினாவாலும் மற்றும் 27% நீடித்திருக்கிற அடிநா அழற்சி ஸ்பைரோசேயிடாவாலும் ஏற்பட்டதாகக் காட்டியது.
  6. Boureau, F. et al. (1999). "Evaluation of Ibuprofen vs Paracetamol Analgesic Activity Using a Sore Throat Pain Model". Clinical Drug Investigation 17: 1–8. - ஃபிரான்சில் 19 மருத்துவர்களைக் பார்த்துவந்த 113 நோயாளிகளை பௌரியேயு ஆய்வு செய்தார். நோயாளிகளுக்கு தொடர்பின்றி இபுப்ரூஃபென் 400 எம்ஜி அல்லது பாராசெடமால் 100 எம்ஜி கொடுக்கப்பட்டது. வலி தீவிரத்தன்மை, விழுங்குதலில் கடினம் மற்றும் உலகளாவிய வலி நிவாரணங்கள் ஆகியவை நோயாளிக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டபிறகு 6 மணிநேரம் வரையில் ஒரு மணிநேர அதிகரிப்பில் அளவிடுவதற்காக பயன்படுத்தப்பட்டது. மூன்று பிரிவுகளிலும் பாரசெடமாலைக் காட்டிலும் இபுப்ரூஃபென் மேம்பட்டு இருந்ததாக முடிவுகள் காட்டின.
  7. Praskash, T. et al. (2001). "Koflet lozenges in the Treatment of Sore Throat". The Antiseptic 98: 124–127. - கோஃப்லெட் லோஸெங்கஸ்ஸின் செயற்படுத்தும் திறன் நோய்குறிசார்ந்த வலி நிவாரணம் மூலம் மதிப்பிடப்பட்டது. 48 நோயாளிகள் மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு அளவுகோலில் 0-3 என்ற வரிசைமுறையில் தரப்படுத்தப்பட்டனர். இதில் 0 என்பது எந்த அறிகுறியும் மற்றும் நோய் அறிகுறிகளும் இல்லை என்றும் 3 என்பது மிக மோசமான நிலை என்பதையும் குறிக்கும். முடிவுகள் பாரிங்கிடிஸ்ஸுடன் கூடிய நோயாளிகளைக் காட்டியது அதில் 95% நோயாளிகள் உடன்பாடான பின்னூட்டங்களைக் கொண்டிருந்தனர். அடிநா அழற்சி நோயாளிகள் மற்றும் இரு நோய் அறிகுறிகளையும் கொண்ட நோயாளிகள் 100% உடன்பாடான பின்னூட்டங்களை வழங்கினர்.
  8. Touw-Otten FW, Johansen KS (1992). "Diagnosis, antibiotic treatment and outcome of acute tonsillitis: report of a WHO Regional Office for Europe study in 17 European countries". Fam Pract 9 (3): 255–62. doi:10.1093/fampra/9.3.255. பப்மெட்:1459378. - நவம்பர் 1989 ஆம் ஆண்டு முதல் மே 1990 ஆம் ஆண்டு வரையில் தாங்கள் பார்த்த 4094 நோயாளிகளை உட்படுத்திய ஒரு ஆய்வில் 17 ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொன்றிலிருந்தும் குறைந்தது 10 மருத்துவர்கள் பங்கேற்றனர். தொண்டைப் புண், சிவப்பாதல் மற்றும் அடிநாச் சதை வீக்கம், அடிநாச் சதையில் சீழ், பெரிதாகிய உடற்கூறு நிணநீர் கணுக்கள் அல்லது காய்ச்சல். நோய்எதிர்ப்பு பயன்பாடுகளைத் தீர்மானிப்பதற்காக நுண்மங்கள் மற்றும் ஊனீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. நோய்எதிர்ப்பு முடிவுகளின்படி 3646 நோயாளிகளில் 2334 நபர்கள் பென்சிலின் பயன்படுத்தினர். 3646 நபர்களில் 343 நபர்கள் அமாக்சிசிலினும் 3646 நபர்களில் 554 நபர்கள் மாக்ரோலைட்ஸைப் பயன்படுத்தினர்.
  9. Paradise JL, Bluestone CD, Bachman RZ, et al. (1984). "Efficacy of tonsillectomy for recurrent throat infection in severely affected children. Results of parallel randomized and nonrandomized clinical trials". N. Engl. J. Med. 310 (11): 674–83. பப்மெட்:6700642. - டான்ஸில்லெக்டோமி அல்லது டான்ஸில்லெக்டோமி மற்றும் அடிநா டெக்டோமியைக் கொண்டிருக்கும் 187 குழந்தைகளை பாராடைஸ் ஆய்வுசெய்தார். 91 குழந்தைகள் இலக்கின்றி அறுவை சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சையற்ற பிரிவுகளில் வைக்கப்பட்டனர். இதர 96 குழந்தைகள் பெற்றோர்களின் விருப்பப்படி வைக்கப்பட்டனர். அறுவை சிகிச்சை குழு தங்கள் ஆரம்ப மற்றும் இரண்டாம் ஆண்டின் வருகையின்போது தரவுகள் சேகரிக்கப்பட்டன, தொண்டை நோய்த்தாக்கம் மீண்டும் ஏற்படும் ஆதரவான முடிவைக் கொண்டிருந்தது. இறுதியில் அறுவை சிகிச்சையற்ற குழுக்கள் நன்றாகவே செயல்பட்டன. அறுவை சிகிச்சை குழுவின் 95 பேரில் 13 நபர்கள் தங்களுடைய இரண்டாவது ஆண்டு வருகைக்குப் பின்னர் அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்களை எதிர்கொண்டனர்.
  10. அடிநா அழற்சி: சுய பராமரிப்பு - மாயோகிளினிக்.காம்
  11. Scottish Intercollegiate Guidelines Network. (January 1999). "6.3 Referral Criteria for Tonsillectomy". Management of Sore Throat and Indications for Tonsillectomy. Scottish Intercollegiate Guidelines Network. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-899893-66-0. http://www.sign.ac.uk/guidelines/fulltext/34/section6.html. - இந்த அளவுகோல்கள் பின்வரும் இடதிலிருந்து "எந்த விசாரணையுமின்றி முடிவுசெய்யப்பட்டது" என்று குறிப்பிடுகிறார்
    Paradise JL, Bluestone CD, Bachman RZ, et al. (1984). "Efficacy of tonsillectomy for recurrent throat infection in severely affected children. Results of parallel randomized and nonrandomized clinical trials". N. Engl. J. Med. 310 (11): 674–83. பப்மெட்:6700642.
  12. Paradise JL, Bluestone CD, Colborn DK, Bernard BS, Rockette HE, Kurs-Lasky M (2002). "Tonsillectomy and adenotonsillectomy for recurrent throat infection in moderately affected children". Pediatrics 110 (1 Pt 1): 7–15. doi:10.1542/peds.110.1.7. பப்மெட்:12093941. - அதே குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பிந்தைய ஆய்வு குறைந்த தீவிரத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆராய்ந்து இவ்வாறு முடிவுக்கு வந்தனர், "மீண்டும் மீண்டும் தொண்டை நோய்த்தாக்கத்தால் பாதிப்படைந்த குழந்தைகளிடத்தில் டான்சில்லெக்டோமி அல்லது அடெனோடோசில்லெக்டோமியால் வழங்கப்பட்ட அளவான ஆதாயம் இயல்பான இடர்ப்பாடுகள், நோயுற்ற நிலை மற்றும் அறுவை சிகிச்சைகளின் செலவுகள் ஆகியவை அவற்றை நியாயப்படுத்தவில்லை போல் தெரிகிறது"
  13. Wolfensberger M, Mund MT (2004). "[Evidence based indications for tonsillectomy]" (in German). Ther Umsch 61 (5): 325–8. பப்மெட்:15195718. - கடந்த 25 ஆண்டுகளின் இலக்கியத்துக்குரிய மதிப்பீடு இவ்வாறு முடிவுகூறுகிறது "என்றாலும், டான்ஸில்லெக்டோமியை நியாயப்படுத்தும் ஆண்டு நிகழ்வுகளின் எண்ணிக்கை பற்றிய எந்த கருத்துஒப்புதலும் இதுவரை எட்டப்படவில்லை"
  14. Del Mar CB, Glasziou PP, Spinks AB (2004). "Antibiotics for sore throat". Cochrane Database Syst Rev (2): CD000023. doi:10.1002/14651858.CD000023.pub2. பப்மெட்:15106140. http://www.mrw.interscience.wiley.com/cochrane/clsysrev/articles/CD000023/frame.html. - வெளியிடப்பட்ட ஆய்வின் மெடா-அனாலிசிஸ்
  15. Zoch-Zwierz W, Wasilewska A, Biernacka A, et al. (2001). "[The course of post-streptococcal glomerulonephritis depending on methods of treatment for the preceding respiratory tract infection]" (in Polish). Wiad. Lek. 54 (1-2): 56–63. பப்மெட்:11344703.
  16. Ohlsson, A. (September 28 2004). "Antibiotics for sore throat to prevent rheumatic fever: Yes or No? How the Cochrane Library can help". CMAJ 171 (7): 721. doi:10.1503/cmaj.1041275. பப்மெட்:15451830. http://www.cmaj.ca/cgi/content/full/171/7/721. - கோச்ரேன் பகுப்பாய்வு மீதான கனேடியன் மருத்துவ அமைப்பின் ஜர்னல் விரிவுரை
  17. "Treatment of sore throat in light of the Cochrane verdict: is the jury still out?". MJA 177 (9): 512–515. 2002. http://www.mja.com.au/public/issues/177_09_041102/dan10028_fm.html.கோச்ரேன் அனாலிசிஸ் மீதான ஆஸ்திரேலிய மெடிக்கல் அசோசியேஷன் ஜர்னல் விரிவுரை

புற இணைப்புகள்

ஆகியவற்றுக்கிடையில் உள்ள வேறுபாட்டைக் காட்டும் படம்

வார்ப்புரு:Respiratory pathology வார்ப்புரு:Inflammation

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.