நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு

நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு (International Statistical Classification of Diseases and Related Health Problems) என்பது எல்லா வகையான நோய்கள், அவற்றின் அறிகுறிகள், நலச் சிக்கல்கள், நலக்கேடுகள், காயங்கள், மற்றும் இதர உடல் நலக் குறைபாடுளை வகைப்படுத்தி குழப்பம் ஏற்படாதவாறு தனிச்சுட்டு தருமாறு குறியீடுகளை வழங்கும் முறைமை ஆகும். இந்த முறைமையை உலக நல அமைப்பு வெளியிடுகிறது. "நோய்களுக்கும், நலக்கேடுகளுக்குமான அனைத்துலக புள்ளியியல் வகைப்பாடு" என்பதை ஆங்கிலத்தில் சுருக்கமாக "அனைத்துலக நோய்கள் வகைப்பாடு" (அ.நோ.வ) எனும் கருத்துக்கொண்ட ஐ.சி.டி (ICD - International Classifiaction of Diseases) என்று குறிப்பர்.

அ.நோ.வ பதிப்புகள்

அ.நோ.வ-6

1949இல் ஆறாவது பதிப்பு வெளியிடப்பட்டது, இது உளநலக் குறைபாடுகள் பிரிவை உள்ளடக்கிய முதல் பதிப்பாகும்.

அ.நோ.வ-9

உலக நல அமைப்பு ஒன்பதாம் பதிப்பை 1977ம் ஆண்டு வெளியிட்டது.

அ.நோ.வ-10

முதன்மைக்கட்டுரை : அ.நோ.வ-10

இப்பதிப்பை உருவாக்கும் வேலைகள் 1983இல் ஆரம்பித்து 1992இல் நிறைவுபெற்றது.[1] நோய்களுக்கான குறியீட்டுப் பட்டியலில் அ.நோ.வ-9இல் இல்லாதவை புதிதாகச் சேர்க்கப்பட்டது. இதுவே தற்போது பயன்பாட்டில் உள்ள நோய்கள் வகைப்பாட்டு முறையாகும், எனினும் நாடுகளுக்குத் தக்கவாறு இவற்றில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அ.நோ.வ-11

இப்பதிப்பின் உருவாக்கம் உலக நல அமைப்பு மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, 2015ம் ஆண்டளவில் இது வெளியிடப்படலாம் என நம்பப்படுகின்றது.[2] [3]

மேற்கோள்கள்

  1. "International Classification of Diseases (ICD)". உலக சுகாதார அமைப்பு. பார்த்த நாள் 23 November 2010.
  2. "Revision of the International Classification of Diseases (ICD)". உலக சுகாதார அமைப்பு. பார்த்த நாள் 29 October 2010.
  3. meagenda (January 11, 2010). "ICD-11 timeline". Article. DSM-5 and ICD-11 Watch. மூல முகவரியிலிருந்து April 13, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 5, 2010.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.