கண்ணீர்க்கோளவழல்

கண்ணீர்க்கோளவழல் (Dacryoadenitis) என்பது கண்ணீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது.

கண்ணீர்க்கோளவழல்
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புophthalmology
ஐ.சி.டி.-10H04.0
ஐ.சி.டி.-9375.0
நோய்களின் தரவுத்தளம்3430
MedlinePlus001625
ஈமெடிசின்oph/594
MeSHD003607

நோய்க் காரணங்கள், நோய் நிகழ்வு, இடர் காரணிகள்

கடிய கண்ணீர்க்கோளவழல் பொதுவாக தீ நுண்மம், பாக்டீரியா போன்ற நோய்த்தொற்றுகளினால் ஏற்படுகிறது. பொதுவான நோய்க் காரணங்களாக தாளம்மை (கூவைக்கட்டு), எப்ஸ்டீன்-பார் வைரசு, கோளவுயிரிகளான சுடாபிலோகாக்கஸ் (staphylococcus), மேகவெட்டை நோய் நுண்மம் (gonococcus) போன்றவைக் குறிப்பிடப்படுகின்றன. நீண்டகால கண்ணீர்க்கோளவழல் சாதாரணமாக நோய்த்தொற்றுகளற்ற அழற்சி சீர்குலைவுகளால் ஏற்படுகிறது. உதாரணமாக இணைப்புத்திசுப் புற்று (sarcoidosis) நோயைக் கூறலாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.