போலிப்படலப் பெருங்குடல் அழற்சி
போலிப்படலப் பெருங்குடல் அழற்சி (pseudomembranous colitis) என்பது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகளால் உண்டாகும் வயிற்றுப்போக்குடன் தொடர்புடைய பெருங்குடல் அழற்சி ஆகும். பெரும்பாலும் இது கிளாஸ்டிரிடம் டிஃபிசிள் எனும் பாக்டீரியாவினால் உண்டாகிறது. துர்நாற்றம் வீசும் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி போன்றவை இந்நோயின் அறிகுறிகள்.
போலிப்படலப் பெருங்குடல் அழற்சி | |
---|---|
![]() | |
போலிப்படலப் பெருங்குடல் அழற்சியின் நுண்ணோக்கி தோற்றம் | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | infectiology |
ஐ.சி.டி.-10 | A04.7 |
ஐ.சி.டி.-9 | 008.45 |
நோய்களின் தரவுத்தளம் | 2820 |
MedlinePlus | 000259 |
ஈமெடிசின் | med/1942 |
MeSH | D004761 |
நோய்த்தோற்றவியல்
மனிதப் பெருங்குடலில் பல பாக்டீரியங்கள் இயல்பாகவே குடியிருக்கின்றன. அப்படிப்பட்ட இயல்பான வாழிகளுள் கிளாஸ்டிரிடியம் டிஃபிசிளும் ஒன்று. ஆனால் இதை விட அதிக அளவில் பாக்டீரியாட்ஸ் போன்ற பாக்டீரியங்கள் பெருங்குடலில் வாழ்கின்றன. அதிக ஆற்றல் உடைய கிளின்டாமைசின் போன்ற நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் போது அது இதர இயல்பான பெருங்குடல் வாழிகளை அழித்து கிளாஸ்டிரிடியம் டிஃபிசிள் அதிகமாக வளர வழி வகுக்கிறது.
மருத்துவம்
மெட்ரோனிடசோல் மற்றும் வான்கோமைசின் ஆகிய மருந்துகள் இந்நோய்க்குப் பயன்படுத்தப்படுகின்றன.