மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம்
மாணாக்கர் ஆகாதவர் இலக்கணம் என்று மாணாக்கர் ஆவதற்குத் தகுதியில்லாதவர்களை நன்னூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
கள்ளுண்டு களிப்பவன், சோம்பல் உடையவன், தன்னைத் தானே பெருமை பேசிக்கொள்பவன், காமுகன், கள்வன், நோயாளி, அறிவில் ஏழையானவன், குணம் மாறுபடப் பேசுபவன், சினமுடையவன், மிகுதியாக உறங்குபவன், மந்த புத்திக்குச் சொந்தக்காரன், தொன்னூல்களைக் கற்க அஞ்சுபவன், அஞ்சவேண்டிய செயல்களுக்கு அஞ்சாதவன், பாவத்தைச் செய்யும் இயல்பு கொண்டவன், பொய் பேசுபவன் ஆகியோரெல்லாம் மாணாக்கர் ஆவதற்குத் தகுதியற்றவர்கள் என்று பட்டியலில் காட்டப்பட்டுள்ளது[1]
அடிக்குறிப்புகள்
- .. களிமடி மானி காமி கள்வன் பிணியன் ஏழை பிணக்கன் சினத்தன் துயில்வோன் மந்தன் தொன்னூற்கு அஞ்சித் தடுமா றுளத்தன் தறுகணன் பாவி படிறன் இன்னோர்க்குப் பகரார் நூலே. - நன்னூல் 39
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.