கரும்வெருகு

கரும்வெருகு[2] அல்லது நீலகிரி மார்ட்டின் (Nilgiri marten, Martes gwatkinsii) என்பது தென்னிந்தியாவில் காணப்பபடும் ஒரேயொரு மார்ட்டின் இன விலங்கு. இது நீலகிரி மலையிலும் அதனை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. மார்ட்டின் எனப்படுவது முசுட்டெலிடே எனும் குடும்பத்தைச் சேர்ந்த ஊனுன்னி விலங்கு.

கரும்வெருகு
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Carnivora
குடும்பம்: Mustelidae
பேரினம்: Martes
இனம்: M. gwatkinsii
இருசொற் பெயரீடு
Martes gwatkinsii
(ஆர்சுஃபீல்டு, 1851)
Nilgiri marten range

தோற்றக்குறிப்பு

இவ்விலங்கு மஞ்சள் கழுத்து மார்ட்டினை ஒத்திருந்தாலும் சற்றுப் பெரியது. மண்டையோட்டின் அமைப்பும் மாறுபட்டது. வால் தவிர உடல் 55 முதல் 65 செ.மீ நீளமும் வால் 40 முதல் 45 செ.மீ நீளமும் இருக்கும். எடை ஏறத்தாழ 2.1 கிலோ கொண்டது.

பரவல்

நீலகிரி மலைப்பகுதியிலும் குடகின் தென்பகுதியிலும் திருவிதாங்கூர் பகுதியிலும் காணப்படுகிறது.

பழக்கவழக்கங்கள்

இது பகலில் வேட்டையாடும் பகலாடி விலங்கு. மரத்தை வாழிடமாகக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது தரைக்கு வருகிறது. சிறு பாலூட்டிகள், பறவைகள், சிக்காடா பூச்சி முதலாவற்றை உணவாகக் கொள்கிறது.

உசாத்துணை

  1. "Martes gwatkinsii". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2008). Database entry includes a brief justification of why this species is of vulnerable
  2. சு. தியடோர் பாஸ்கரன் (2018 ஆகத்து 4). "வேட்டைக்காரன்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 5 ஆகத்து 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.