திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையிலிருந்து புதுச்சேரிவரை செல்லும் கிழக்குகடற்கரை சாலையில் கோவளம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருவிடந்தை எனும் கடற்கரை கிராமத்தில் உள்ளது. மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள், அகிலவல்லித் தாயார் ஆவர். மூலவரின் சன்னதிக்கு வலதுபுறத்தில் கோமளவல்லித்தாயாருக்கு ஒரு சன்னதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு ஓரு தனிச்சன்னதியும் உள்ளது. திருவரங்கப்பெருமாளுக்கும் ஓரு தனிச்சன்னதி உள்ளது. தலவரலாற்றின்படி மூலவர் நித்ய கல்யாணப்பெருமாளான மகாவிஷ்ணு தினம் ஒரு பெண்ணாக வருடம் முழுவதும் திருமணம் செய்ததாகவும் அதனாலே மூலவர் நித்ய கல்யாணப்பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில் நுழைவாயில் வளைவு
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்
பெயர்
பெயர்:திருவிடந்தை நித்ய கல்யாணப்பெருமாள் கோவில்
அமைவிடம்
ஊர்:திருவிடந்தை
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நித்ய கல்யாணப்பெருமாள்
தாயார்:அகிலவல்லித் தாயார்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உண்டு

சிறப்புகள்

திருமணம் விரைவில் நடைபெறவேண்டி பலரும் இக்கோயிலுக்கு வருவது இக்கோயிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.