திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில்
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். இத்திருத்தலம் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | கருநீலக்குடி ராஜ்யத்து திருத்தங்கல்[1] |
பெயர்: | திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | திருத்தங்கல் , (திருத்தண்கால்) |
மாவட்டம்: | விருதுநகர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | நின்ற நாராயணன் |
உற்சவர்: | திருத்தண்காலப்பன் |
தாயார்: | செங்கமலத்தாயார். அன்னநாயகி (ஸ்ரீதேவி) அனந்தநாயகி (நீளாதேவி) அம்ருதநாயகி (பூமாதேவி) |
தீர்த்தம்: | பாபவிநாச தீர்த்தம், பாஸ்கர சங்க, பத்ம அர்ஜூன தீர்த்தங்கள் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | தேவசந்ர விமானம் |
கல்வெட்டுகள்: | செப்பேடுகள் (6000 பழைமை)[1] |
தலவரலாறு
பெருமாளின் தேவியர் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோரிடையே யார் உயர்ந்தவர் என்ற போட்டியெழ தமது உயர்வை நிரூபிக்க ஸ்ரீதேவி பூமியில் தவம் புரிந்தார். பெருமாள் ஸ்ரீதேவியை மணம்புரிந்தருளிய திருத்தலம். மகாலட்சுமித் தாயார் தவம் புரிந்த தலம் அழகிய சாந்த மணவாளர் திருக்கோயில் தலம்.
சிலப்பதிகாரத்தில்
சிலப்பதிகாரத்தில் வரும் வார்த்திகன் கதை இத்தலத்தில் நிகழ்ந்தது.[1]
ஆராய்ச்சியாளர்கள்
பாண்டிய மன்னர்கள் குறித்து ஆராயும் ஆராய்ச்சியாளர்களுக்கு பல புதிய தகவல்களை வழங்கும் ஊராகவும் திருத்தலமாகவும் அமைகிறது.
மைசூர் நரசிம்மர் ஆலயம்
இத்திருத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் மைசூர் நரசிம்மர் ஆலயத்தில் உள்ளது.
தலவரலாற்றுத் தொடர்புடைய திருக்கோயில்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.