திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்பது பெரும்பெற்றப்புலியூர் நம்பி என்பவரால் எழுதப்பெற்ற சைவ சமய நூலாகும். இந்நூல் திருவிளையாடல் புராணத்துக்கு முன்பு தோன்றியது எனக் கருதப்படுகிறது. [1]
வேறு பெயர்கள்
இந்நூலை திருவாலவாயுடையார் திருவிளையாடல் என்றும் அழைப்பர். இந்நூல் காலத்தால் முந்தயது என்பதால் பழைய திருவிளையாடல் என்றும், வேம்பத்தூரார் திருவிளையாடல் என்றும் அழைக்கப்படுகிறது. [2]
இந்நூலின் ஆசிரியர் பெரும்பெற்றப் புலியூர் நம்பியின் காலம் பதிமூன்றாம் நூற்றாண்டாக கருதப்படுகிறது.[1] இவர் கிபி 1228ஆம் ஆண்டு இந்நூலை இயற்றி பாண்டிய அரசனிடம் இறையில் நிலம், பல்லக்கு போன்றவைகளைப் பெற்றுள்ளார். [1]
அச்சில்
திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம் எனும் இந்நூலை அச்சல் 1906ஆம் ஆண்டு உ. வே. சாமிநாதன் ஐயர் கொண்டு வந்துள்ளார். அதன் பிறகு 1927 மற்றும் 1972 ஆகிய இரு பதிப்புகள் வந்திருக்கின்றன.
இந்நூல் உத்தரமகாபுராணம் எனும் வடமொழி நூலான சாரசமுச்சயம் எனும் பிரிவிலிருந்து மொழிபெயர்த்து எழுதப்பட்டதாகும். இதனை ஓதரிய எனும் செய்யுளினஅ மூலமாகவும், "அம் பதுமத்தார்" எனும் நூற்சிறப்பு பாயிரச் செய்யுள் மூலம் அறிந்து கொண்டதாக உ.வே.சா குறிப்படுள்ளார். இந்நூல் 1753 செய்யுள்களைக் கொண்டதாகும்.