மாபாதகம் தீர்த்த படலம்
மாபாதகம் தீர்த்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 26 ஆவது படலமாகும்.(செய்யுள் பத்திகள்: 1534 - 1574)[1]. இது பழியஞ்சின படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும். இந்த படலத்தில் கொடூரமாக தந்தையை கொன்று, தாயிடமிருந்து செல்வத்தையும், அணிகலன்களையும் தாசியிடம் கொடுக்கும் இளைஞன், நோயால் அவதியுற்று இறைவன் அடி சேருவதை குறிப்பிட்டுள்ளார்கள். இறைவன் நல்லவர்களுக்கு அருள்வதைப் போல தீயவர்களுக்கும் அருள்கிறான் என்ற கருத்தினை இப்படலம் வலியுறுத்துகிறது.
சுருக்கம்
அரசன் குலோத்துங்கன் ஆட்சி காலத்தில் ஓர் அந்தண இளைஞன் தன்னுடைய பெற்றோர்களை வதைத்து, தாசியிடம் பொருளை கொடுத்து இன்பமாக இருந்தான். பெரும் செல்வேந்தர்களாக இருந்த பெற்றோர்கள், மகனின் நடவெடிக்கையால் குடிசைக்கு வந்தார்கள்.
அவனுடைய இச்செய்கை பிடிக்காமல் தடுத்த தந்தையை இளைஞன் கொன்றான். தாயிடமிருந்து அணிகளன்களைப் பெற்று தாசியிடம் கொடுத்தான். இதனால் அவனுக்கு கடுமையான நோய் உண்டானது. தன்னுடைய தவறுக்கு வருந்தி மதுரை சொக்கநாதர், மீனாட்சியம்மை கோயிலுக்கு வந்தான்.
இளைஞனின் நோயால் அவனுடைய உடல் மெலிந்து போனது. அவனைக் கண்டு இறக்கம் கொண்ட இறைவன் வேடர் வடிவத்தில் வந்து, இறைவனை வணங்கி துன்பம் நீக்க வழிகளை கூறினார். அதன் படியே அந்த இளைஞன் புதின குளத்தில் நீராடி இறைவனை வணங்கி நற்கதி பெற்றான்.[2]
ஆதாரங்கள்
- "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 29. மாயப் பசுவை வதைத்த படலம் (1626 - 1663)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1998-2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.
- http://temple.dinamalar.com/news_detail.php?id=2253