பழியஞ்சின படலம்

பழியஞ்சின படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 25ஆவது படலமாகும். (செய்யுள் பத்திகள்: 1490 - 1533)[1]. இது கால் மாறி ஆடிய படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும்.

சுருக்கம்

குலோத்துங்க பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் திருப்பத்தூர் எனும் ஊரைச் சேர்ந்த அந்தணர் குடும்பம் மதுரைக்கு வந்து கொண்டிருந்து. பயணக் களைப்பில் இருந்து விடுபட ஒரு மரத்தடியில் மனைவி இளைப்பாற, குழந்தை விளையாட கணவன் நீரைத் தேடி சென்றார். அப்போது அந்த மரத்திலிருந்த ஒரு அம்பு விழுந்து மனைவி இறந்தாள். அந்த அம்பு முன்னோர் காலத்தில் ஒரு வேடன் இட்டதாகும். குறிதவறி சென்று மரத்தில் சிக்கிய அம்பு இப்போது அந்தணனின் மனைவியைக் கொன்றது.

இதனையெல்லாம் அறியாது மரத்தின் மறுஇடத்தில் வேடன் ஒருவன் தங்கினான். நீர் கொண்டு வந்த அந்தணன் மனைவியை அம்பு தைத்து கொன்றிருப்பதை கண்டு அழுதான். யார் செய்திருப்பார் என காண்கையில் உறங்க்கொண்டிருந்த வேடன் தென்பட்டான். அவனிடம் மனைவியை கொன்றமைக்கா முறையிட, வேடன் தான் கொல்லவில்லை என வாதாடினான்.

அந்தணர் வேடனை அரண்மனைக்கு அழைத்து சென்றார். இருதரப்பு பேச்சையும் கேட்ட அரசன் அவர்களை ஒரு வாரம் கழித்து வரும்படி கூறிவிட்டு, சொக்கநாதரை தரிசித்து இக்கட்டான இந்த வழக்கில் இருந்து காக்குமாறு வேண்டினார். இறைவன் அருளால் இரு கிங்கனங்கள் பேசுவதையும். அவர்கள் அந்த அம்பினால் அந்தணன் மனைவி இறந்தமையும் தெரிவித்தமையை அறிந்து கொண்டான். தவறு செய்யாத அந்த வேடரை காத்து, அந்தணரில் துயரத்தில் பங்கெடுத்தான் அரசன்.[2]

காண்க

ஆதாரங்கள்

  1. "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 29. மாயப் பசுவை வதைத்த படலம் (1626 - 1663)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (1998-2014). பார்த்த நாள் 11 செப்டம்பர் 2016.
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=2254
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.