தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்

தமிழை (Tamil) ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளும், தமிழ்ப் பண்பாட்டைக் கொண்டுள்ள நாடுகளும் பட்டியலிடப்படுகின்றன.

சோழர் ஆட்சிக்காலத்தில் பரவியிருந்த தமிழ்

உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியிலிருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர். உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவரும், தமிழ்நாட்டில், தமிழீழத்தில் தமிழரோடு வாழ்ந்து தமிழில் பேசி, தமிழ்ப் பண்பாட்டை கடைபிடிப்பவரும் தமிழர் ஆவர். பழங்காலத்தில் சீனா, எகிப்து, கம்போடியா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.[1] பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இது போன்ற காரணங்களால் தமிழர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மக்கள்தொகையும் தமிழர்கள் அந்நாடுகளில் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் தமிழை மற்ற சில நாடுகளிலும் ஆட்சி மொழியாக்க காரணங்களாய் அமைந்தன.

சிங்கப்பூர் நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் உள்ளன

நாடுகள்

தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகள் (சட்டத்தின்படி)
நாடு பகுதி மக்கள்1
இந்தியா[2] ஆசியா 66,742,402
 சிங்கப்பூர்[3] ஆசியா 150,184
 இலங்கை[4] ஆசியா 5,065,930

நாட்டின் பகுதிகள்

இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ் பேசுவோர்
பகுதி கண்டம் மக்கள்தொகை நிலை
அந்தமான் நிக்கோபார் தீவுகள்ஆசியா3,79,944ஒன்றியப் பிரதேசம்
பாண்டிச்சேரிஆசியா12,44,464ஒன்றியப் பிரதேசம்
தமிழ்நாடுஆசியா7,21,38,958மாநிலம்

அங்கீகரிக்கப்படாத பகுதிகள்

பகுதிகள் குறிப்பு
காரைக்கால்தனி ஒன்றியப் பிரதேசமாகக் கோருகிறது.[5]

முன்பு தமிழ் அலுவலக மொழியாக இருந்த பகுதி(கள்)

பகுதி குறிப்பு
தில்லிஅரியானாவில் தமிழ் அலுவலக மொழியாக இந்தி மாற்றப்படும் வரை இருந்தது.[6]

தமிழை அலுவலக மொழியாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள்

பண்பாட்டு மொழி

மேற்கூறிய நாடுகள் தவிர சில நாடுகளில் தமிழ் ஒரு பண்பாட்டு மொழியாக வாழ்கிறது.

மொரீசியசு நாட்டுப் பணத்தில் தமிழ் எழுத்துகள் (இன்றும் உள்ளன)
நாடு பகுதி
 மலேசியா[7] ஆசியா
 மொரிசியசு[8] ஆபிரிக்கா
இறீயூனியன் [9] ஆப்பிரிக்கா
 சீசெல்சு[10] ஆப்பிரிக்கா
 கனடா[11] வட அமெரிக்கா

இந்தியா மற்றும் ஐக்கிய நாடுகள் அவையின் ஆட்சிமொழியாகத் தமிழை ஏற்குமாறு கோரப்பட்டுள்ளது.[12]

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "[archaeologyindia.com Tamil Inscriptions]". archaeologyindia. "Tamil Inscriptions of Egypt and Thailand"
  2. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "".
  3. Wong, Aline (2000-11-24). "Education in a Multicultural Setting – The Singapore Experience". Ministry of Education, Government of Singapore. பார்த்த நாள் 2009-01-18. "There are four official languages: English, Chinese, Malay and Tamil."
  4. "Language Dept Sri Lanka". "Tamil and Sinhala official language of Sri Lanka"
  5. http://www.hindu.com/2005/09/14/stories/2005091404810300.htm
  6. Punjabi edges out Tamil in Haryana, DNAIndia, Ajay Bharadwaj, Sunday, 7 March 2010 – 12:49am
  7. "Malaysian Languages and education".
  8. "Mauritius Culture". மூல முகவரியிலிருந்து 2012-11-15 அன்று பரணிடப்பட்டது.
  9. "Reunion Culture".
  10. "Seychelles National Culture".
  11. "Tamil Canadians".
  12. "Make Tamil as Official Language".

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.