திருத்திய தமிழ் எழுத்துவடிவம்

திருத்திய தமிழரிச்சுவடி அல்லது சீர்திருத்திய தமிழரிச்சுவடி என்பது தமிழ் அரிச்சுவடியின் ஏற்படுத்தப்பட்ட மாற்றமாகும்.

திருத்திய தமிழ் அசை

1978இல் தமிழ்நாடு அரசு தற்போதுள்ள தமிழ் அரிச்சுவடியில் சில அசைகளை அரிச்சுவடியை இலகுபடுத்தும் நோக்குடன் திருத்தியது.[1] அதன் நோக்கம் ஆ, ஓ மற்றும் ஐ அசைகளின் ஒரு அளவிற்குட்படாத அசைகளை அளவிற்குட்படுத்துவதாகும்.[2] இத்திருத்தங்கள் இந்தியாவிலும் எண்மிய உலகிலுமே பரவியது. ஏனைய பகுதிகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, ரீயுனியன் மற்றும் தமிழ் பேசும் பகுதிகள் பாரம்பரிய அசைகளையே தொடர்ந்து பாவித்தன.

மேலும், முன்மொழியப்பட்ட திருத்தங்கள் 15 இல் 13 மட்டுமே வெற்றியளித்தது. முன்மொழியப்பட்ட அய் என்பதற்குப் பதில் மற்றும் முன்மொழியப்பட்ட அவ் என்பதற்குப் பதில் ஒள ஆகியவற்றை மக்கள் தொடர்ந்து பாவித்தனர்[3]

வரலாறு

  • 1930 காரைக்குடியில் இருந்து வெளிவந்த குமரன் இதழில் அதன் ஆசிரியர் முருகப்பா ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களைப் பயன்படுத்தி ஒரு கட்டுரையை வெளியிட்டு வாசகர் கருத்தை வரவேற்றார்.
  • 1933 -ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி. சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர் கட்டுரை எழுதினார்.
  • 1935 குடியரசு இதழில் பெரியார் எழுத்து என்று குமரன் இதழ் ஆசிரியர் முருகப்பா 1930ல் பயன்படுத்திய மாற்றங்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் ஒலி மாற்றங்களையும் சேர்த்து திருந்திய வரிவடிவத்தைப் புகுத்தித் தொடந்து குடியரசிலும், விடுதலையிலும் பயன்படுத்தினர். (அய், அவ், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ)
  • 1941 சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • 1948 பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில் நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது.
  • 1975 பிப்ரவரித் திங்களில் தமிழகப் புலவர் குழு உயிர்மெய் உகர ஊகாரம் உட்பட எழுத்துச் சீர்திருத்த ஆய்வுத் தீர்மானம் நிறைவேற்றியது. (இப்பொழுது தமிழகப் புலவர் குழு சீர்திருத்தத்தை எதிர்க்கிறது. குழு உறுப்பினர்களில் எழுத்துச் சீரமைப்பை ஆதரிப்பவர்களும் உள்ளனர்)
  • 1977 ஆம் ஆண்டு தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிஞர் கருத்தறிந்து எல்லோரும் ஏற்கும் வகையில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்வதாக உறுதியளித்தது.
  • 1978-79 ல் பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டித் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாகப் பெரியார் 1935 முதல் பயன்படுத்தி வந்த வரி வடிவத்தில் அய், அவ் தவிர மற்றவற்றைச் செயற்படுத்தியது.
  • 1983 ல் சிங்கப்பூர் அரசு இச்சீர்திருத்தத்தை ஏற்றது. 1984 தைத் திங்கள் முதல் செயற்படுத்தியது.

குறிப்புக்கள்

  1. Bellary Shamanna Kesavan, Prathivadibayangaram Narasimha Venkatachari (1984). History of printing and publishing in India: a story of cultural re-awakening, Volume 1. National Book Trust. பக். 82.
  2. Unicode. "South Asian scripts". pp. 35–36. http://www.unicode.org/versions/Unicode6.0.0/ch09.pdf. பார்த்த நாள்: 31 December 2011.
  3. Mello, Fernando. "Evolution of Tamil typedesign". Evolution of Tamil typedesign. பார்த்த நாள் 31 December 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.