சங்க இலக்கியம்

சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.

சங்க இலக்கியம் ஓர் எடுத்துக்காட்டு

யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-கணியன் பூங்குன்றனார்
(புறநானூறு - 192)

19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்கள்,பத்துப்பாட்டு நூல்கள்,பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எட்டுத்தொகை நூல்கள்

நூல் காலம் இயற்றியவர்
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை
குறுந்தொகை
ஐங்குறுநூறு கபிலர்
பதிற்றுப்பத்து
பரிபாடல்
கலித்தொகை நல்லந்துவனார் முதலிய பலர்
அகநானூறு பலர்
புறநானூறு பலர்

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள்
திருமுருகாற்றுப்படை எட்டாம் நூ.ஆ. நக்கீரர்
பொருநராற்றுப்படை முடத்தாமக்கண்ணியார்
சிறுபாணாற்றுப்படை 4 - 6ஆம் நூ.ஆ. நற்றாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங்கண்ணனார்
நெடுநல்வாடை 2 - 4ஆம் நூ.ஆ. நக்கீரர்
குறிஞ்சிப் பாட்டு கபிலர்
முல்லைப்பாட்டு நப்பூதனார்
மதுரைக் காஞ்சி இரண்டாவுது,நான்காவது நூ.ஆ. மாங்குடி மருதனார்
பட்டினப் பாலை மூன்றாம் நூ.ஆ.
மலைபடுகடாம் இரண்டாவது,நான்காவது நூ.ஆ. பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
திருக்குறள் திருவள்ளுவர்
நான்மணிக்கடிகை ஆறாம் நூ.ஆ. விளம்பி நாகனார்
இன்னா நாற்பது 5ஆம் நூ.ஆ. கபிலதேவர்
இனியவை நாற்பது ஐந்தாம் நூ.ஆ. பூதஞ்சேந்தனார்
களவழி நாற்பது ஐந்தாம் நூ.ஆ. பொய்கையார்
திரிகடுகம் நான்கவது நூ.ஆ. நல்லாதனார்
ஆசாரக்கோவை 7ஆம் நூ.ஆ. பெருவாயின் முள்ளியார்
பழமொழி நானூறு 6ஆம் நூ.ஆ. மூன்றுரை அரையனார்
சிறுபஞ்சமூலம் 6ஆம் நூ.ஆ. காரியாசான்
முதுமொழிக்காஞ்சி 4ஆம் நூ.ஆ. கூடலூர் கிழார்
ஏலாதி 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார்
கார் நாற்பது 6ஆம் நூ.ஆ. கண்ணன் கூத்தனார்
ஐந்திணை ஐம்பது 6ஆம் நூ.ஆ. மாறன் பொறையனார்
திணைமொழி ஐம்பது 6ஆம் நூ.ஆ. கண்ணன் பூதனார்
ஐந்திணை எழுபது 6ஆம் நூ.ஆ. மூவாதியார்
திணைமாலை நூற்றைம்பது 6ஆம் நூ.ஆ. கணிமேதாவியார்
கைந்நிலை 6ஆம் நூ.ஆ. புல்லங்காடனார்
நாலடியார் 7ஆம் நூ.ஆ. சமணமுனிவர்கள் பலர்

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

சங்க இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.