தஞ்சாவூர் பூலோக கிருஷ்ணன் கோயில்

பூலோக கிருஷ்ணன் கோயில், தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில் சகாநாயக்கன் தெருவில் அமைந்துள்ளது. யஞ்ஞ நாராயணப்பெருமாள் கோயில் வளாகத்தில் இரு கோயில்கள் உள்ளன. அக்கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

பூலோக கிருஷ்ணன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர் மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:யஞ்ஞ நாராயணப்பெருமாள்

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1]

யஞ்ஞ நாராயணப்பெருமாள்

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது எதிரில் பலிபீடம் காணப்படுகிறது. அடுத்து கருடாழ்வார் உள்ளார். முன் மண்டபத்தில் ஆஞ்சநேயர் உள்ளார். கருவறை முன்பாக இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். மூலவராக யஞ்ஞ நாராயணப்பெருமாள் ஸ்ரீதேவி பூமிதேவியுடன் உள்ளார். சன்னதியின் வலப்புறம் அனுமார், ராமானுஜர் உள்ளிட்ட பல சிற்பங்கள் காணப்படுகின்றன.

பூலோக கிருஷ்ணன்

மூலவர் சன்னதியின் இடப்புறம் உள்ள சன்னதியில் பூலோககிருஷ்ணன் ருக்மணி சத்யபாமாவுடன் உள்ளார். வாயிலின் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர்.

கருட சேவை

ஒவ்வோராண்டும் நடைபெறும் கருட சேவையின்போது கலந்துகொள்ளும் 24 கோயில் பெருமாள்களில் இக்கோயிலைச் சேர்ந்த பெருமாளும் ஒருவர் ஆவார்.[2]

குடமுழுக்கு

இக்கோயிலில் 4 செப்டம்பர் 2016 அன்று குடமுழுக்கு நடைபெற்றது.[3][4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.