தஞ்சாவூர் பிரதாப வீர அனுமார் கோயில்

தஞ்சாவூர் பிரதாப வீர அனுமார் கோயில், தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம், தஞ்சாவூரில் மேல வீதியில் அமைந்துள்ளது.

பிரதாப வீர அனுமார் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சை மாவட்டம்
அமைவு:தஞ்சாவூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:மூலை அனுமார் எனப்படும் பிரதாப வீர அனுமார்

தேவஸ்தான கோயில்

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[1] மராட்டிய மன்னர் பிரதாப சிம்மனின் (கி.பி.1739-1763) காலத்தில் தஞ்சாவூர் இருந்தபோது அவரால் இக்கோயில் கட்டப்பட்டது.[2]

அமைப்பு

இக்கோயில் முன் மண்டபம், கருவறை, விமானம் ஆகிய அமைப்புகளோடு விளங்குகிறது. முன் மண்டபத்தில் பலிபீடமும், கொடி மரமும் காணப்படுகின்றன. திருச்சுற்றில் பாண்டுரங்கன், ருக்மா பாய் உள்ளனர்.

மூலவர்

இக்கோயிலின் மூலவராக பிரதாப வீர அனுமார் உள்ளார்.[3]

சிறப்பு

வட மேற்கு மூலையில் அமைந்துள்ளதால் இந்த அனுமாரை மூலை அனுமார் என்றழைக்கப்படுகிறார்.

விழாக்கள்

மேற்கோள்கள்

  1. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆலயங்கள், தஞ்சை இராஜராஜேச்சரம் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மலர், 1997
  2. அருள்மிகு பிரதாபவீர அனுமார் திருக்கோயில், திருக்கோயில்கள் வழிகாட்டி, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  3. கே.எம்.வேங்கடராமையா, தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.