தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில்
தஞ்சாவூர் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோயில் தஞ்சாவூரில் உள்ள அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.

இருப்பிடம்
இக்கோயில் கீழவாசல் பகுதியில் அமைந்துள்ளது.
அமைப்பு
இக்கோயில் நுழைவாயில், முன் மண்டபம், திருச்சுற்று, கருவறை, மூலவர் விமானம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. திருச்சுற்றில் ஏனாதிநாய நாயனார், சிவதுர்க்கை, கல்யாண கணபதி, அய்யப்பன், அனுமன் ஆகியோர் உள்ளனர். வேப்ப மரத்தின் அருகே நாக சிற்பங்கள் உள்ளன. அடுத்து நவக்கிரகங்கள் காணப்படுகின்றன. மூலவர் சன்னதிக்கு முன்பாக வலப்புறம் செல்வ விநாயகரும், இடப்புறம் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு எதிரில் சூலம், பலி பீடம், கொடி மரம், சிங்கம் ஆகியவை காணப்படுகின்றன.
மூலவர்
இக்கோயிலின் மூலவராக உஜ்ஜயின் மாகாளியம்மன் உள்ளார்.
குடமுழுக்கு
29 ஆகஸ்டு1988 திங்கட்கிழமை அன்று இக்கோயிலுக்கான கால்கோள் விழா வாளமர் கோட்டை காத்தையா சுவாமிகளால் நடத்தப்பட்டதற்கான கல்வெட்டும், 10 பிப்ரவரி 1989 விபவ ஆண்டு தை மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டும் இக்கோயிலில் காணப்படுகின்றன.