தங்க நாற்கரச் சாலைத் திட்டம்

தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும். இத்திட்டம் 1998ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாகக் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.

தங்க நாற்கரச் சாலை
இந்திய நெடுஞ்சாலை வரைபடத்தில் ஊதா வண்ணத்தில் தங்க நாற்கரச்சாலை வழித்தடம் காட்டப்பட்டுள்ளது
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இதேநெஆ
நீளம்:5,846 km (3,633 mi)
தில்லிகொல்கத்தா
நீளம்:1,453 km (903 mi)
Major
junctions:
தேநெ 2
தில்லிமும்பை
Length:1,419 km (882 mi)
முக்கிய
சந்திப்புகள்:
தேநெ 8, தேநெ 79A, தேநெ 79, தேநெ 76
மும்பைசென்னை
நீளம்:1,290 km (800 mi)
முக்கிய சந்திப்புகள்:தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா), தேநெ 7, தேநெ 46
கொல்கத்தாசென்னை
நீளம்:1,684 km (1,046 mi)
முக்கிய சந்திப்புகள்:தேநெ 6, தேநெ 60, தேநெ 5
Highway system

இது அப்போதை இந்தியப் பிரதமர் வாஜ்பாயினால் துவங்கப்பட்டது. இந்த முதல் கட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் (NHDP), ரூபாய் 60,000 கோடி ( ஐக்கிய அமெரிக்க $ 12.2 பில்லியன்) செலவில் 5.846 கிமீ (3,633 மைல்) தூரம் நான்கு/ஆறு வழி(லேன்) விரைவு(எக்ஸ்பிரஸ்) நெடுஞ்சாலைகள் கொண்டது.

நன்மைகள்

  • குறைவான பயண நேரம்
  • குறைந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் சிக்கனம்.
  • தரமான சாலைக் கட்டமைப்பால் குறைந்த விபத்துக்களும் பாதுகாப்பானப் பயணமும்

ஒவ்வொரு மாநிலத்தின் தங்க நாற்கரச் சாலை நீளம்

முடிக்கப்பட்டதும் தங்க நாற்கரச் சாலை இந்தியாவின் 13 மாநிலங்கள் வழியாக கடக்கும்:

எண்மாநிலம்தூரம்
1ஆந்திர பிரதேசம்1,014 km (630 mi)
2உத்தர பிரதேசம்756 km (470 mi)
3ராஜஸ்தான்725 km (450 mi)
4கர்நாடகம்623 km (387 mi)
5மகாராஷ்டிரா487 km (303 mi)
6குஜராத்485 km (301 mi)
7ஒரிசா440 km (270 mi)
8மேற்கு வங்காளம்406 km (252 mi)
9தமிழ்நாடு342 km (213 mi)
10பீகார்204 km (127 mi)
11ஜார்க்கண்ட்192 km (119 mi)
12அரியானா152 km (94 mi)
13தில்லி25 km (16 mi)
மொத்தம்5,846 km (3,633 mi)

தற்போதைய நிலவரம்

எண்வழிநிறைவடைந்த நீளம் (கி.மீ)மொத்த நீளம் (கி.மீ)நிறைவு (சதவீத்ததில் (%)இன்றைய நிலவரப்படிஆதாரம்
1.டெல்லி-கொல்கத்தா1,453 km (903 mi)1,453 km (903 mi)100ஆகஸ்ட்31, 2011
2.மும்பை - சென்னை1,290 km (800 mi)1,290 km (800 mi)100ஆகஸ்ட் 31, 2011
3.கொல்கத்தா-சென்னை1,667 km (1,036 mi)1,684 km (1,046 mi)98.99செப்டம்பர் 30, 2011
4.டெல்லி-மும்பை1,419 km (882 mi)1,419 km (882 mi)100ஆகஸ்ட் 31, 2011
Total5,829 km (3,622 mi)5,846 km (3,633 mi)99.70செப்டம்பர் 30, 2011

NHAI - Current status

இணைக்கப்படும் நகரங்கள்

தில்லி - கொல்கத்தா தில்லி - மும்பை சென்னை - மும்பை கொல்கத்தா - சென்னை

மேற்கோள்கள்

    வெளி இணைப்பு

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.