ஆசான்சோல்

ஆசன்சோல் (Asansol , வங்காள: আসানসোল) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் அமைந்துள்ள நிலக்கரி சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் மலிந்த சுறுசுறுப்பான வணிக பெருநகர் பகுதியாகும். மேற்கு வங்காள மாநிலத்தில் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக பெரிய நகரமாக விளங்குகிறது. [2] இந்நகரம் மாநகராட்சி மன்றத்துடன் கூடியது.

Asansol
আসানসোল
आसनसोल

சுரங்கங்களின் நகரம்
மாநகராட்சி / Urban Agglomeration
ஆசன்சோல் நகரமைப்பு
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம் (இந்தியா)மேற்கு வர்த்தமான்
அரசு
  வகைCivic Administration
  Bodyஆசன்சோல் மாநகராட்சி asansolmunicipalcorporation.org
பரப்பளவு
  மாநகராட்சி / Urban Agglomeration127.3
ஏற்றம்97
மக்கள்தொகை (2011)
  மாநகராட்சி / Urban Agglomeration1
  அடர்த்தி4,434
  பெருநகர்12,43,008
மொழி
  அதிகாரப்பூர்வமானதுபெங்காலி, இந்தி, etc.
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்713 3xx
தொலைபேசி குறியீட்டு எண்0341
வாகனப் பதிவுWB 37 / WB 38 / WB 44
பாலின விகதம்1.08[1] /
கல்வியறிவு84.82[1]%
மக்களவை தொகுதிஆசன்சோல்
சட்டமன்றத் தொகுதிஆசன்சோல் வடக்கு, ஆசன்சோல் தெற்கு
இணையதளம்asansolmunicipalcorporation.org

மாநிலத்தின் மேற்கு எல்லையில் மேற்கு வர்த்தமான் மாவட்டத் தலைமையிடம் ஆகும். மிகுந்த தொழிலாளர்கள், உயர்ந்த தனிநபர் வருமானம், நல்ல கல்வி நிறுவனங்கள், போக்குவரது வசதிகள் என வளர்ச்சிக்கு வழிகோலும் காரணிகளைக் கொண்டுள்ளது. இதன் பின்புலத்தில் பாங்குரா மற்றும் புரூலியா மாவட்டங்களும் வடக்கு வங்காளமும் உள்ளன. ஒரிசா மற்றும் சார்க்கண்ட் மாநிலங்களுடனும் அணுக்கமான தொடர்பு கொண்டுள்ளது. ஓர் பிரித்தானிய ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் 100 விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் இடம் பெற்றுள்ள 11 இந்திய நகரங்களில் ஒன்றாக ஆசன்சோல் திகழ்கிறது. .[3]

ஆசன்சோல் என்ற பெயர் இரு பெயர்களின் கூட்டாகும்; ஆசன் என்பது தாமோதர் ஆற்றங்கரைகளில் காணப்படும் ஒருவகை மரத்தையும் சோல் என்பது மண் எனவும் குறிக்கும். இணையாக கனிமங்கள் நிறைந்த பூமி எனப் பொருள் கொள்ளலாம்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Cities having population 1 lakh and above". Provisional Population Totals, Census of India 2011. பார்த்த நாள் 29 March 2012.
  2. http://www.censusindia.gov.in/towns/wb_towns.pdf
  3. "World's fastest growing urban areas (1)". City Mayors (7 December 2010). பார்த்த நாள் 16 March 2011.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.