கொங்கணி மொழி

கொங்கணி மொழி இந்தியாவில் பேசப்படும் மொழிகளுள் ஒன்று. இது இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்பமான இந்திய-ஈரானியக் குடும்பத்திலுள்ள இந்திய-ஆரிய மொழிகள் பிரிவைச் சேர்ந்தது. இப் பிரிவின் தெற்கு வலய மொழிகளுள் ஒன்றாக இது வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இம் மொழியில் குறிப்பிடத்தக்க அளவில் திராவிட மொழிச் சொற்கள் காணப்படுகின்றன. போத்துக்கேயம், கன்னடம், துளு, மராத்தி, பாரசீக மொழி போன்ற பல மொழிகளின் செல்வாக்கு இம் மொழியில் உண்டு.

கொங்கணி மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-2kok
ISO 639-3Variously:
kok  கொங்கணி (பொது)
knn  கொங்கணி (குறிப்பிட்ட)
gom  கோவா கொங்கணி

அமைவிடம்

இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியான கொங்கண் என அழைக்கப்படும் பகுதியில் இது பேசப்படுகின்றது. மகாராஷ்டிர மாநிலத்தின் கொங்கண் பிரிவு, கோவா, கனரா (கரையோரக் கர்நாடகம்), கேரளாவின் சில இடங்கள் என்பன இப் பகுதியுள் அடங்குகின்றன. இப் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் பேசப்படுவது கொங்கணியின் வெவ்வேறு கிளைமொழிகளாக உள்ளன. இவை, ஒலிப்பு முறை, சொற் தொகுதி, தொனி, சில சமயங்களில் இலக்கணம் போன்ற அம்சங்களில் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

மக்கள் தொகை

1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கொங்கணி பேசுவோர் தொகை 1,760,607 ஆகும். இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையின் 0.21% ஆகும். பேசுவோர் தொகையின் அடிப்படையில், இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள மொழிகளில் இது 15 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவிலிருந்து சென்ற கொங்கணி பேசுவோர் பலர் வெளி நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். எத்னோலாக் கொங்கணி பேசுவோர் தொகையை 7.6 மில்லியன் எனக் குறிப்பிட்டுள்ளது.

தோற்றம்

கொங்கணி மொழி கொங்கண் பகுதியில் சிறப்பாக கோமந்தக் எனப்பட்ட இன்றைய கோவாப் பகுதியிலேயே வளர்ச்சி பெற்றது. இம்மொழியின் தோற்றம் பற்றி இரு வேறு கோட்பாடுகள் உள்ளன. இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஓடிய சரஸ்வதி ஆறு சுமார் கி.மு. 1900 ஆவது ஆண்டு காலப் பகுதியில், நிலநடுக்கம் காரணமாக நிலத்துள் அமிழ்ந்துவிட்டது. இதனால் அப்பகுதியில் வாழ்ந்தோர் அப்பகுதியை விட்டு வேறிடங்களுக்கு இடம் பெயரவேண்டி ஏற்பட்டது. நீண்ட பயணத்தின் பின் இவர்களில் ஒரு பகுதியினர் கோமந்தக் பகுதியில் தங்கினர். அவர்கள் தங்கள் மொழியாகிய சௌரசேனி பிராகிருதம் என்ற மொழியைப் பேசினர். இதுவே காலப்போக்கில் தற்காலக் கொங்கணி மொழியாக வளர்ச்சி பெற்றது என்பது ஒரு கோட்பாடு.

அடுத்த கோட்பாட்டின்படி, தற்காலக் கொங்கணி மொழி கோக்னா இனக்குழுவினர் பேசிவந்த மொழியின் சமஸ்கிருதமயம் ஆக்கப்பட்ட வடிவம் என்பதாகும். கோக்னா இனக்குழுவினர், வடக்கு மகாராஷ்டிரத்திலும், தெற்குக் குஜராத்திலும் வாழ்கின்றனர். இவர்களே கொங்கண் பகுதியின் முதன்மையான குடியேற்றவாசிகளாக இருந்திருக்கக் கூடுமெனக் கருதப்படுகிறது. கொங்கண் பகுதிக்கு இடம் பெயர்ந்த ஆரியர் இம் மொழியில் சமஸ்கிருத மற்றும் பிராகிருத மொழிச் சொற்களைக் கலந்ததால் கொங்கணி மொழி உருவானது என்பது இக் கோட்பாட்டை ஆதரிப்போர் கருத்து.

எழுத்து

கொங்கணி பல எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டு வந்திருக்கிறது. தொடக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பயன்பாட்டில் இருந்து பின்னர் வழக்கிழந்து விட்டது. கோவாவில் இப்பொழுது தேவநாகரியே அதிகாரபூர்வமான எழுத்தாக உள்ளது. ரோம எழுத்துக்களும் கோவாவில் பயன்பாட்டில் உள்ளன. கராடகத்தில் வாழும் கொங்கணி பேசுவோர் கன்னட எழுத்துக்களையும், கேரளாவில் கொச்சி, கோழிக்கோடு போன்ற பகுதிகளில் வாழ்வோர் மலையாள எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர். கர்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும் வாழும் சில முஸ்லிம்கள் அரபு எழுத்துக்களையும் பயன்படுத்துகின்றனர்.[1]

கொங்கணி எழுத்துக்கள்
IPA குறியீடுதிருத்திய
தேவநாகரி
பொது
தேவநாகரி
ரோம
எழுத்து
கன்னட
எழுத்து
மலையாள
எழுத்து
அரபி
எழுத்து
ɵoಅ/ಒ--
aa--
iii--
i--
uuu--
u--
ee--
ɛe--
æகுறி இல்லைए அல்லது ऐeಎ அல்லது ಐ--
əiai/oi--
oo--
ɔo--
əuau/ou--
अंअंom/onಅಂ--
kkಕ್--
khಖ್--
ggಗ್--
ghಘ್--
ŋंगng--
tsच़च़chಚ್--
cchಚ್--
chhಛ್--
zज़ज़z--
ɟjಜ್--
झ़झ़zhಝ್--
ɟʱjhಝ್--
ɲnh--
ʈttಟ್--
ʈʰtthಠ್--
ɖddಡ್--
ɖʱddhಢ್--
ɳnnಣ್--
tತ್--
t̪ʰthಥ್--
dದ್--
d̪ʰdhಧ್--
nnನ್--
ppಪ್--
fफ़fಫ್--
bbಬ್--
bhಭ್--
mmಮ್--
ji/e/ieಯ್--
ɾrರ್--
llಲ್--
ʃxಶ್--
ʂxಷ್--
ssಸ್--
ɦhಹ್--
ɭllಳ್--
ʋvವ್-A-

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.