அங்கிகா

அங்கிகா (ஆங்கிலம்: Angika, இந்தி: अंगिका) மொழி இந்தியாவின் பீகார் , ஜார்கண்ட் , மேற்கு வங்காளம் மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் பேசப்பட்டும் இந்தோ ஈரானிய மொழி ஆகும்.இம்மொழி சற்றே வங்காள மொழியை ஒத்து இருக்கும். மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் மக்கள் பேசிய மொழி இதுவாகும்.

அங்கிகா
நாடு(கள்)இந்தியா, நேபாளம்
பிராந்தியம்பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
740,000  (1997)[1]
இந்தோ-ஐரோப்பிய
  • இந்தோ-ஈரனிய
    • இந்தோ-ஆரியன்
      • அங்கிகா
மொழிக் குறியீடுகள்
ISO 639-2anp
ISO 639-3

நிலை

இந்திய அரசால் 8 ஆவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 அலுவல் மொழிகளுள் ஒன்றாக இது இல்லை.அதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ளது.[2]

எழுத்து

அங்கிகா மொழி தேவநாகரி எழுத்துவடிவில் எழுதப்படும். பழங்காலத்தில் அங்கா லிபி மற்றும் காய்தி போன்றவை புழக்கத்தில் இருந்தன.[3]

வேறு பெயர்கள்

இம்மொழி கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.

  • அங்கி
  • சுர்ஜாபூரி
  • அங்கிகார்
  • செக்கா-சிக்கி
  • சாய்-ச்செள
  • பாகல்பூரி
  • செக்காரி
  • கேய்ல்-கேய்லி
  • தீதி

மொழி பேசுவோர்

கிழக்கு பீகார் காதிகார் , புர்னியா , கிசாங்காஜ் , மதேபுரா , சகர்சா , பாகல்பூர் , பங்கா , ஜாமுய் , முங்கர் , லகிசாராய் , பெங்குசாராய் மற்றும் சீக்புரா ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது. ஜார்கண்ட் சகப்காங்ஜ் , ஹோடா , டியோஹார் , பகுர் , டும்கா மற்றும் ஜம்ட்ரா ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது.

மேலும் , அங்கிகா மொழி பேசும் மக்கள் அதிக அளவு ஈரான் , அமெரிக்கா , இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.

திரைப்படம்

இம்மொழியின் முதல் திரைப்படம் 27 ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு பீகாரின் லெஷ்மி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் பெயர் கஹாரியா வாலி போவ்ஜி ஆகும்.அதன் பின் 2010-ல் அங் புத்ரா எனும் திரைப்படம் வெளியானது.மேலும் கைசே சாந்தோ பிகுலா பிஸ்கரி கை எனும் திரைப்படம் வெளியாகப்போகிறது.

விக்கிப்பீடியாவில் அங்கிகா

விக்கிப்பீடியாவில் அங்கிகா மொழியைச் சேர்க்க வேண்டும் என ஓட்டெடுப்பு நடக்கிறது.

மேற்கோள்கள்

  1. "Languages in the Eighth Schedule". Ministry of Home Affairs (2004-12-22). பார்த்த நாள் 2011-05-05.
  2. "Angika.com".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.