லம்பாடி மொழி

லம்பாடி (Lambadi) அல்லது பஞ்சாரா என்பது இந்தியாவில் வாழும் லம்பாடி நாடோடி மக்களால் பேசப்படும் மொழி. இது இராஜஸ்தானி மொழியுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழி.

லம்பாடி
பஞ்சாரி
நாடு(கள்)இந்தியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
2.8 மில்லியன்  (1997)
இந்தோ ஐரோப்பிய
  • லம்பாடி
மொழிக் குறியீடுகள்
ISO 639-3lmn

கோரா, சிங்களி, சுகளி, லவானி, லம்பானி என்று பல பெயர்களால் இம்மொழி அழைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கணிசமான அளவு லம்பாடி மொழி பேசும் மக்கள் உள்ளனர். அந்தந்த மாநிலங்களில் லம்பாடி மொழி அந்தந்த மாநிலப் பெரும்பான்மை மொழியில் எழுதப்படுகிறது. லம்பாடி மொழியினர் பெரும்பாலும் இரு மொழியினராக உள்ளனர். தமிழ்நாட்டிலும் லம்பாடி மொழி பேசும் மக்கள் சிலர் உள்ளனர்.

உசாத்துணை

  • Boopathy, S. investigation & report in: Chockalingam, K., Languages of Tamil Nadu: Lambadi: An Indo-Aryan Dialect (Census of India 1961. Tamil Nadu. Volume ix)
  • Trail, Ronald L. 1970. The Grammar of Lamani.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.