லம்பாடி
Banjara லம்பாடி (Banjara, Lampadi, Lamani or LambaniBanjara) எனும் நாடோடி மக்கள் மராட்டிய சத்தாரா பகுதியிலிருந்து தெற்குப் பகுதியில் வந்து குடியேறிவர்களாவர். இவர்கள் மராத்தியும் குஜராத்தி மொழியும் கலந்த வகையில் அமைந்த கோரெர் (Gorer) மற்றும் கார்போலி[1] மொழியையும் பேசுகின்றனர். ஆங்கில அரசின் ஆவணங்களில் குறிப்பாக அன்றைய ஐதராபாத் மாநில அரசின் ஆவணங்களில் லம்பாடிகள், லம்படாக்கள், பிரிஞ்சாரிகள், பிரிஞ்சாரர்கள், லாமனிகள், பஞ்சாரிகள், மதுரா பஞ்சார்கள், சரன்பஞ்சார்கள், சுகாவிஸ் எனப் பல்வேறு பெயர்களில் லம்பாடியினத்தவர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2]


தற்சமயம இம்மக்கள் தமிழகத்தில் வாழ்கின்ற மக்களோடு கலந்து இச்சூழலுக்கேற்றவாறு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டுள்ளமையால் இவர்கள் தங்கள் தாய்மொழியை விட தமிழை பேசுபவர்களாக உள்ளனர்.[3] இவர்களின் மொழி இம்மக்களின் அன்றாட வழக்கிலிருந்து குறைந்து தற்சமயம் அரிதாகியுள்ளது.
லம்பாடி இனத்தவர் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் இனத்துப் பெண்கள் அணியும் உடையைக் கேலிக்குரியதாகச் சொல்லும் வழக்கம் இன்னும் உள்ளது. தமிழ்நாட்டில் லம்பாடி இன மக்கள் ஒதுக்கப்படுபவர்களாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவுமே வாழ்கின்றனர். கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் உள்ள இவர்கள் தமிழ்நாட்டிலும் தங்களைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அல்லது பழங்குடியின வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
- "தமிழ்நாட்டில் நாடோடிகள்". தமிழ் முகில் (மார்ச்சு 4, 2011). பார்த்த நாள் அக்டோபர் 21, 2012.
- Bhangya Bukya (2010). subjugated Nomads - The Lambadas Under The Rule of The Nizams. Orient Blackswan. பக். பக்கம் 1.
- "லம்பாடி ஆதிக் குடிகள்". சுபாஷினி. தமிழ்மரபு அறக்கட்டளை (18 September 2011). பார்த்த நாள் அக்டோபர் 21, 2012.