கழறிற்றறிவார் நாயனார்
சேரமான் பெருமாள் சேர நாட்டு மன்னன். மகோதை என்னும் ஊரில் இருந்துகொண்டு கி.பி. 871 ஆண்டுகளைச் சார்ந்து அரசான்டு வந்தார்.[1] இவர் 63 நாயன்மார்களில் ஒருவராகச் சேர்க்கப்பட்டபோது சேரமான் பெருமாள் நாயனார் என வழங்கப்பட்டார். இவர் சிவ பூசையின்போது தில்லை நடராசப் பெருமானின் மணியோசையைக் கேட்கும் பேறு பெற்றிருந்தார் என்றும், அதனால் கழறிற்று அறிவார் [2] எனப் போற்றப்பட்டார் என்றும் பெரியபுராணம் என்னும் நூல் குறிப்பிடுகிறது.
கழறிற்றறிவார் நாயனார் | |
---|---|
பெயர்: | கழறிற்றறிவார் நாயனார் |
குலம்: | அரசர் |
பூசை நாள்: | ஆடி சுவாதி |
அவதாரத் தலம்: | கொடுங்கோளூர் |
முக்தித் தலம்: | திருவஞ்சைக்களம் |
அடிக்குறிப்பு
- செப்பேடு
- சிவபெருமான் கழறியதை அறிவார்
உசாத்துணைகள்
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.