களத்தூர் கண்ணம்மா

களத்தூர் கண்ணம்மா 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். பாலையா, சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். தகாத சூழ்நிலைகளினால் பிரிந்து போகும் இளவயதுத் தம்பதிகளையும், அவர்களுக்குப் பிறக்கும் அப்பாவி மகனையும் அவன் அநாதை இல்லத்தில் வளர்வதைப் பற்றியும் இப்படம் தத்ரூபமாக எடுத்தியம்புகின்றது.

களத்தூர் கண்ணம்மா
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ்
ஏ. வீரப்பன்
எம். குமரன்
கதைஜாவர் சீதாராமன்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புஜெமினி கணேசன்
டி. எஸ். பாலையா
எஸ். வி. சுப்பைய்யா
கமல்ஹாசன்
அசோகன்
சாவித்திரி
தேவிகா
எல். விஜயலட்சுமி
மனோரமா
வெளியீடுஆகத்து 12, 1960
ஓட்டம்.
நீளம்17570 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கண்டது. அத்துடன் மட்டுமன்றி இந்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருது போன்ற விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றது. மவூரி அம்மாயி எனும் பெயரில் தெலுங்கு மொழியில் இத்திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டது.[1] இதே திரைப்படம் சுனில் தத் மற்றும் மீனாகுமாரி போன்றோரின் நடிப்பில் இயக்குனர் ஏ. பீம்சிங் இயக்க மெயின் சப் ரஹுன்கி (Main Chup Rahungi) எனும் பெயரில் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.[2] சிங்கள மொழியிலும் கூட இது மங்கலிக்கா (Mangalika) எனும் பெயரில் ரீமேட் செய்யப்பட்டது.[3]

நடிப்பு

பாடல்கள்

ஆர். சுதர்சனம் அவர்கள் இத்திரைப்படத்திற்கு பாடல் இசை இயற்றியுள்ளார். பாடல்வரிகள் கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கு. மா. பாலசுப்பிரமணியம், எம். கே. ஆத்மநாதன் மற்றும் டி. கே. சுந்தர வாத்தியார் ஆகியோரால் எழுதப்பட்டுள்ளது.

எண்.பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:வி)
1கண்களின் வார்த்தைகள் ...ஏ. எம். ராஜா, பி. சுசீலாகண்ணதாசன்3:33
2சிரித்தாலும் ...சி. எஸ். ஜெயராமன்கண்ணதாசன்3:30
3ஆடாத மணமும் ...ஏ. எம். ராஜா, பி. சுசீலாகு. மா. பாலசுப்பிரமணியம்3:19
4அருகில் வந்தால் ...ஏ. எம். ராஜாகண்ணதாசன்3:23
5அம்மாவும் நீயே ...எம். எஸ். இராஜேஸ்வரிடி. கே. சுந்தர வாத்தியார்2:47
6உன்னைகண்டு மயங்காத ...எஸ். சி. கிருஷ்ணன், டி. எம். சௌந்தராஜன், எம். எஸ். இராஜேஸ்வரி, ஏ. பி. கோமளாகொத்தமங்கலம் சுப்பு6:58
7மலர்களில் மது எதற்கு ...ஜிக்கிஎம். கே. ஆத்மநாதன்2:93
8அம்மாவும் நீயே ...எம். எஸ். இராஜேஸ்வரிடி. கே. சுந்தர வாத்தியார்1:26

குறிப்புகள்

  • நடிகர் கமல்ஹாசன் நடித்த முதல் திரைப்படம் இதுவே ஆகும்.
  • கமல்ஹாசன் முதல் படத்திலேயே அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி விருது (தேசிய விருது) அப்போதைய ஜனாதிபதியான இராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெற்றார்.

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை. "Tamil Cinema 75 – A Look Back" (PDF). Anna Nagar Times. பார்த்த நாள் 11 November 2012.
  2. V. V. Ramanan (12 May 2012). "Arts / Cinema : CinemaPlus Quiz". தி இந்து. பார்த்த நாள் 2012-08-09.
  3. E. Weerapperuma (29 October 2007). "Sri Lankan film industry enters diamond era — Part 4". Daily News Sri Lanka. மூல முகவரியிலிருந்து 18 July 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 18 July 2013.

உசாத்துணை

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.