என் மனைவி

என் மனைவி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, நாகர்கோவில் கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

என் மனைவி
இயக்கம்சுந்தர் ராவ் நட்கர்னி
தயாரிப்புசரஸ்வதி சினி பிலிம் லெபரட்டரி
கதைஜி. பி. தேவால்
மூலக்கதைமராத்தி புதினம்: சம்சாய் கலோல் (1916)
திரைக்கதைசுந்தர் ராவ் நட்கர்னி
இசைசரசுவதி ஸ்டோர்ஸ் அர்க்கெஸ்ட்ரா
நடிப்புகே. சாரங்கபாணி
நாகர்கோவில் கே. மகாதேவன்
நடேச ஐயர்
கிருஷ்ண ஐயங்கார்
எம். கே. மீனலோசனி
ஆர். பத்மா
டி. ஆர். சந்திரா
கே. ஆர். செல்லம்
பாடலாசிரியர்டி. கே. சுந்தர வாத்தியார்
ஒளிப்பதிவுடி. முத்துசுவாமி
படத்தொகுப்புசுந்தர் ராவ் நட்கர்னி
கலையகம்பிரகதி பிக்சர்சு, மதராஸ்
விநியோகம்ஃபேமஸ் டாக்கி
வெளியீடு1942
நீளம்16977 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தயாரிப்பு விபரம்

1941 ஆம் ஆண்டு வெளியான சபாபதி திரைப்படம் வெற்றி பெற்றதால் ஏற்பட்ட உற்சாகத்தினால் அவிச்சி மெய்யப்பச் செட்டியார் அதே பாணியில் மற்றொரு படத்தைத் தயாரிக்க விரும்பினார். மராட்டிய திரையுலகில் இயக்குநராக விளங்கிய சுந்தர் ராவ் நட்கர்ணி அப்போது சாந்த சக்குபாய் திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகிலும் காலெடுத்து வைத்திருந்தார். அவரை ஏ. வி. எம். செட்டியார் தனது அடுத்த படத்துக்கு இயக்குநராக நியமித்தார். மராட்டிய மொழியிலான ஒரு சமூக நகைச்சுவைக் கதையை தேர்ந்தெடுத்தார்கள். இந்தத் திரைப்படத்தில் இன்னொரு புதிய அம்சத்தையும் புகுத்தினார்கள். அதுவரை புராணப் படங்களில் நாரதர் வேடத்தில் நடித்து வந்த நாகர்கோவில் மகாதேவனை ஒரு உல்லாச வாலிபன் பாத்திரத்தில் நடிக்க வைத்தார்கள்.

நடிகர்கள்

திரைப்படத் தலைப்பு காட்சிகளிலிருந்து இந்தப் பட்டியல் தொகுக்கப்பட்டது

  • கே. சாரங்கபாணி - வேம்பு ஐயர்
  • நாகர்கோவில் கே. மகாதேவன் - தனபால் குப்தா
  • எஸ். ஆர். கிருஷ்ண ஐயங்கார் - கோபால் குப்தா
  • ஆர். நடேசையா (ரல்லபந்தி நடேசன்) - சமையல்காரன் சுப்பு
  • அப்புடு - அப்பாயி
  • என். எஸ். கண்ணன்
  • கே. எஸ். ஜெகதீஸ்வர ஐயர்
  • கே. வி. சொர்ணப்பா
  • கணபதி பட்
  • கே. வி. சண்முகம்
  • கே. ஆர். செல்லம் - செல்லம்
  • எம். கே. மீனலோசனி - ரேவதி
  • வி. எம். பங்கஜம் - பேபி
  • ஆர். பத்மா - ஸ்வாதி
  • டி. ஆர். சந்திரா - ரோகிணி
  • டி. என். சந்திரம்மா - தனம்மாள்
  • லட்சுமிகாந்தன் - தாரிகா

பாடல்கள்

பாடல்களை டி. கே. சுந்தர வாத்தியார் எழுதினார். சரஸ்வதி ஸ்டோர் வாத்தியக் குழுவினர் பின்னணி இசை வழங்கினார்கள். சங்கடமான சமையலை விட்டு .. என்ற பாடல் பிரபலமானது. இப்பாடலை ஆர். நடேசன் பாடினார். என்னிலும் அவள் .. என்ற பி. ஏ. பெரியநாயகி பாடிய பாடலுக்கு ஆர். பத்மா நடனம் ஆடினார்.

எண்பாடல்பாடியோர்
1என்னிலும் அவள் உமக்கு ஏற்றவளோ சுவாமிபி. ஏ. பெரியநாயகி
2ரகுபதே கோசலை குமாராஎம். கே. மீனலோசனி, கே. மகாதேவன்
3அடி கோமளமே! ரேவதியே! கோபமென்னடியேஎம். கே. மீனலோசனி, கே. மகாதேவன்
4மாமழைக் காலமும் போனது ஒரு மாசமானதுடி. ஆர். சந்திரா
5பட்டணத்தைப் பார்க்கப் பார்க்க பசியெடுக்கவுமில்லைஆர். பத்மா
6மாதரை நினையாதே நெஞ்சேகே. சாரங்கபாணி
7பசுவினில் பால கறந்திடுறாள்எம். கே. மீனலோசனி
8சங்கடமான சமையலை விட்டுஆர். நடேசய்யா
9என தன்பான ரூப படமேஎம். கே. மீனலோசனி
10ஆகா மெத்த அபூர்வ ஆக்டுஎம். கே. மீனலோசனி
11எங்கே போனாலும் போங்காணும்எம். கே. மீனலோசனி
12ஜெகதீசா சிறீ பரமேசாஎம். கே. மீனலோசனி, வி. எம். பங்கஜம்

சான்றாதாரங்கள்

  1. "En Manaivi 1942". தி இந்து. 18 ஜூலை 2008. Archived from the original on 25 ஜனவரி 2013. http://archive.is/wiMZQ.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.