கே. எஸ். அங்கமுத்து

கே. எஸ். அங்கமுத்து (1914 - 1994) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாவார். தமிழ்த் திரைப்படங்களின் முதல் நகைச்சுவை நடிகையாக இவர் கருதப்படுகிறார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.[1]

கே. எஸ். அங்கமுத்து

கே. எஸ். அங்கமுத்து (1951)
பிறப்பு 1914 (1914)
நாகப்பட்டினம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு 1994 (அகவை 7980)
துணைவர் திருமணமாகாதவர்
பெற்றோர் எத்திராஜுலு நாயுடு, ஜீவரத்தினம்

பிறப்பும், ஆரம்பகால வாழ்க்கையும்

அங்கமுத்து 1914ஆம் ஆண்டு நாகப்பட்டினத்தில் பிறந்தவர். பெற்றோர்: எத்திராஜுலு நாயுடு - ஜீவரத்தினம். அங்கமுத்துவிற்கு 5 வயது இருக்கும்போது அவருடைய குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது.

நாடகத்துறைப் பங்களிப்புகள்

அங்கமுத்துவின் ஏழு வயதில் தந்தையும், சில ஆண்டுகள் கழித்து தாயும் காலமானதால் ஏழாம் வகுப்புடன் படிப்பு தடைப்பட்டது. சண்முகம் செட்டியார் என்பவர் இவரை வேலூர் நாயர் கம்பெனியில் சேர உதவி செய்தார். சில மாதங்களுக்குப் பிறகு தஞ்சை கோவிந்தன் கம்பெனியில் சேர்ந்த அங்கமுத்து, திருடன் வேடமேற்று நாடகங்களில் நடித்தார். பின்னர் ரங்கசுவாமி நாயுடு கம்பெனியின் சார்பாக மலேசியா சென்றார்.

சில ஆண்டுகள் கழித்து பி. எஸ். ரத்னபாய் - பி. எஸ். சரஸ்வதிபாய் சகோதரிகள் நடத்திவந்த நாடகக் கம்பெனியில் இணைந்தார். எஸ். ஜி. கிட்டப்பா, எம்.கே. தியாகராக பாகவதர், கே. பி. சுந்தராம்பாள் போன்றவர்களுடன் நடித்ததால் இரசிகர்களிடத்து அங்கமுத்து நன்கு அறியப்பட்டார்.

திரைத்துறைப் பங்களிப்புகள்

1933 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட நந்தனார் திரைப்படத்தில் நடிக்க அங்கமுத்துவிற்கு வாய்ப்பு கிடைத்தாலும், அவர் சென்னையில் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இத்திரைப்படத்தில் நடிக்கவில்லை. 1934ஆம் ஆண்டு ரத்னபாய் - சரஸ்வதிபாய் சகோதரிகள் தயாரித்த பாமா விஜயம் படத்தில் அங்கமுத்து நடித்தார்.

1940, 1950 காலகட்டங்களில் பல திரைப்படங்களில் அங்கமுத்து நடித்தார். சிவாஜி கணேசன் அறிமுகமான பராசக்தி, ஏவிஎம்மின் முதல் படமான ரத்னாவளி ஆகியவற்றில் அங்கமுத்து நடித்திருந்தார். இவர் நடித்த கடைசித் திரைப்படம் குப்பத்து ராஜா ஆகும்.

திரைப்படப் படப்பிடிப்புக்கு வில்லு வண்டியில் வரும் வழக்கத்தை 1960கள் வரை அங்கமுத்து கொண்டிருந்தார்.

நடித்த திரைப்படங்களின் பட்டியல்

  1. ரத்னாவளி (1935)
  2. மகாபாரதம் (1936)
  3. மீராபாய் (1936)
  4. சேது பந்தனம் (1937)
  5. மிஸ் சுந்தரி (1937)
  6. பிரேமபந்தன் (1941)
  7. சாந்தா (1941)
  8. காலேஜ் குமாரி (1942)
  9. உத்தமி (1943)
  10. கண்ணம்மா என் காதலி (1945)
  11. தியாகி (1947)
  12. விசித்ர வனிதா (1947)
  13. ஜம்பம் (1948)
  14. தேவதாசி (1948)
  15. கோகுலதாசி (1948)
  16. காமவல்லி (1948)
  17. பில்ஹணா (1948)
  18. விஜயகுமாரி (1950)
  19. கிருஷ்ண விஜயம் (1950)
  20. ராணி (1952)
  21. காதல் (1952)
  22. குமாரி (1952)
  23. ஜாதகம் (1953)
  24. போன மச்சான் திரும்பி வந்தான் (1954)
  25. வீரசுந்தரி (1954)
  26. ரத்தக்கண்ணீர் (1954)
  27. கல்யாணம் செய்துக்கோ (1955)
  28. எங்கள் வீட்டு மகாலட்சுமி (1957)
  29. தங்கமலை ரகசியம் (1957)
  30. அன்பே தெய்வம் (1957)
  31. புதுமைப்பித்தன் (1958)
  32. பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)
  33. அதிசயப் பெண் (1959)
  34. சொல்லுத்தம்பி சொல்லு (1959)
  35. நாட்டுக்கொரு நல்லவள் (1959)
  36. ராஜாமலைய சிம்மன் (1959)

பிற்கால வாழ்க்கை

அங்கமுத்து திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது இறுதிக் காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான இவர் 1994ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.