அன்பே வா
அன்பே வா1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
அன்பே வா | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | எம். முருகன் ஏ. வி. எம். புரொடக்ஷன்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | எம். ஜி. ஆர் சரோஜாதேவி டி. ஆர். இராமச்சந்திரன் நாகேஷ் எஸ். ஏ. அசோகன் |
வெளியீடு | சனவரி 14, 1966 |
நீளம் | 4855 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
ஓயாத உழைப்பிலிருந்து ஓய்வெடுக்க சிம்லாவிலுள்ள தனது மாளிகைக்கு வரும் பாலு, அது சிலருக்குத் தங்குமிடமாக வாடகைக்கு விடப்பட்டிருப்பதைக் கண்டு திடுக்கிடுகிறான். இருப்பினும், தன்னை யாரென்று வெளிப்படுத்திக் கொள்ளாது தானும் வாடகைக்குத் தங்க வந்தவன் போல நடிக்க, அங்கு இருக்கும் லதா என்னும் இளம்பெண்ணுக்கும் அவனுக்கும் ஏற்படும் மோதல்கள், ஒருவரை ஒருவர் ஏமாற்றும் சம்பவங்கள், இவற்றைப் பின் தொடரும் காதல் ஆகியவற்றை நகைச்சுவை மிளிரச் சித்தரித்தது இந்த வண்ணப்படம்.
நடிகர்கள்
முதன்மை நடிகர்கள்
- எம். ஜி. இராமச்சந்திரன் ' ஜே.பி./ பாலு[1]
- பி. சரோஜா தேவி - கீதா[1]
துணை நடிகர்கள்
- எஸ். ஏ. அசோகன் - சேகர்[1]
- நாகேஷ் - இராமையா[2]
- டி. ஆர். இராமச்சந்திரன் - புண்ணியகோடி[3]
- பி. டி. சம்பந்தம் - வீட்டுக் காவலாளி[1]
துணை நடிகைகள்
கீதாவின் தாயார்[5]
- மாதவி - மேரி, கீதாவின் பெற்றோர்களை கவனித்துக் கொள்ளும் செவிலியர்[5]
- எம். எசு. எசு. பாக்கியம் - கண்ணம்மாவின் தாயார்.
சிறப்பம்சங்கள்
- வெளிப்புறப்படப்பிடிப்பு அரிதாக இருந்த அந்நாட்களில் பெரும்பகுதி சிம்லாவில் படமாக்கப்பட்டது இதன் சிறப்பம்சம்.
- முன்னணி நகைச்சுவை நடிகராக வளர்ந்து வந்துகொண்டிருந்த நாகேஷின் மிக அற்புதமான நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தின் கூடுதல் சிறப்பம்சமாகத் திகழ்ந்தன.
- தனது படங்களிலேயே மிகவும் வித்தியாசமான படம் இதுவென்றும், எப்போது பார்த்தாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும் என்றும் எம். ஜி. ஆர் கூறியதாகச் சொல்வர்.
- மெல்லிய நகைச்சுவை இழையோடும் காதல் கதையாக உருவாகிய இத்திரப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஏவி. எம். நிறுவனம் எம்.ஜி.ஆரை வைத்துத் தயாரித்த ஒரே திரைப்படமும் இதுவே.
- விஸ்வநாதன்-இராமமூர்த்தியின் இசையில் இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றன.
- வில்லனாக அன்றி வித்தியாசமான ஒரு குணசித்திர வேடத்தில் அசோகன் நடித்திருந்தார்.
குறிப்பு
- ரொக் ஹட்சன் என்பவர் நடித்த "Come September" ஆங்கிலப் படத்தின் தழுவல் என்று கருதப்படுகிறது.
- "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற புகழ் பெற்ற பாடல் இதில் இடம் பெற்றது.
மேற்கோள்கள்
- Rangan, Baradwaj (12 October 2015). "Mistress of arts". The Hindu. மூல முகவரியிலிருந்து 12 October 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 March 2016.
- "திருப்புமுனை திரைப்படங்கள் - 38: அன்பே வா (1966)" (Tamil). Cinema Express. மூல முகவரியிலிருந்து 9 July 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 July 2016.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.