இலக்குமணன் கோயில்

இலக்குமணன் கோயில் (Lakshmana Temple) சந்தேல வம்ச மன்னர் யசோதர்மனால் வைகுந்த விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மணற்கல் கோயிலாகும்.[2]

இலக்குமணன் கோயில்
இலக்குமணன் கோயில், கஜுராஹோ
இலக்குமணன் கோயில்
மத்தியப் பிரதேசத்தில் இலக்குமணன் கோயிலின் அமைவிடம்
இலக்குமணன் கோயில்
இலக்குமணன் கோயில் (இந்தியா)
ஆள்கூறுகள்:24°51′7.7″N 79°55′18.1″E
பெயர்
பெயர்:இலக்குமணன் கோயில்
தேவநாகரி:लक्ष्मण मंदिर
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:மத்தியப் பிரதேசம்
மாவட்டம்:சத்தர்பூர் மாவட்டம், கஜுராஹோ[1]
அமைவு:கஜுராஹோ[1]
கோயில் தகவல்கள்
மூலவர்:வைகுந்த விஷ்ணு [1]
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:1 (+4 துணைக் கோயில்கள்)
வரலாறு
கட்டப்பட்ட நாள்:ஏறத்தாழ கி பி 930-950[1]
அமைத்தவர்:யசோதர்மன் [1] (சந்தேல ஆட்சியாளர்)

அமைவிடம்

இக்கோயில் இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கஜுராஹோவின் மேற்கு தொகுப்பில் அமைந்த 12 கோயில்களில் ஒன்றாகும்.[1]

கட்டிடக் கலை

கருவறை விஷ்ணு சிலை

இலக்குமணன் கோயில், இந்தியக் கட்டிடக்கலைகளில் ஒன்றான வட இந்திய பஞ்சயாதனக் கட்டிடக் கலைநயத்தில் கட்டப்பட்டது. இக்கோயில்,[1] உயர்ந்த ஒரே மேடையின் (ஜெகதி) மீது எழுப்பப்பட்டுள்ளது. இக்கோயிலில் அர்த்த மண்டபம், மண்டபம், மகாமண்டபம், அந்தராளம், கருவறை, முன்கூடம் (transept), பிரகாரம், சிலுவை வடிவில் குறுக்குக் கைப்பகுதி (புடைச்சிறை)களும், நான்கு மூலைகளில் நான்கு சிறு துணைக் கோயில்களும் கொண்டுள்ளது.

கோயில் மேல்மாடத்தின் சன்னல்கள், அழகிய சிறு தூண்களோடு கூடிய கைப்பிடிச் சுவர்களுடன் கட்டப்பட்டுள்ளது.இக்கோயில் சுவரில் இரண்டு வரிசைகளில் கடவுளர்கள், தேவதைகளின் சிற்பங்களும், சிற்றின்பத்தை விளக்கும் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

கோயில் கருவறையின் வாசல் படியில் ஏழு செங்குத்து கதவுகள் உள்ளது.[1] அவற்றில் விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் கொண்டுள்ளது. உத்தரத்தில் நடுவில் இலக்குமியில் சிற்பமும், பிரம்மா மற்றும் விஷ்ணுவின் சிற்பங்களும் உள்ளது. கோயில் கருவறையில் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவின் சிலை, வராக அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரங்களை நினைவுப் படுத்தும் வகையில் நடுவில் மனித தலையுடனும், இருபுறங்களில் வராகம் மற்றும் சிங்கத் தலைகளுடன் உள்ளது.

காமசூத்திரக் கலையில் கூறியுள்ள பல சிற்றின்பச் செயல்களை விளக்கும் சிற்பங்கள் இக்கோயில் சுவர்களில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோளகள்

  1. "Archaeological Survey of India (ASI) – Lakshmana Temple". Archaeological Survey of India (ASI). பார்த்த நாள் 21 March 2012.
  2. http://whc.unesco.org/en/list/240

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.