இசுலாமியா கல்லூரி
இசுலாமியா கல்லூரி (Islamiah College) தமிழ்நாடு, வேலூர் மாவட்டத்தில், வாணியம்பாடி நகரத்தில் உள்ளது. இக்கல்லூரி வாணியம்பாடி முசுலிம் கல்விச் சங்கம் நடத்தும் ஓர் கல்விக்கூடமாகும். கல்லூரியில் கலை, அறிவியல், வணிகம் ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட தன்னாட்சி கல்வி நிறுவனமாகும்.
இசுலாமியா கல்லூரி | |
---|---|
நிறுவல்: | 1919 |
வகை: | தன்னாட்சி பெற்றது |
அமைவிடம்: | வாணியம்பாடி, தமிழ்நாடு, இந்தியா |
இணையத்தளம்: |
வரலாறு
சர் சையத் அஹமத்கானின் கருத்துகளின்படி 1901ம் ஆண்டு வாணியம்பாடி முசுலிம் கல்விச் சங்கம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், இசுலாமியா தொடக்கப்பள்ளி 1903ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்தது. இக் கல்லூரிக்கு சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் பெண்ட்லேண்ட் பிரபுவால் 1916 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இக் கல்லூரி 1919 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1916 ஆம் ஆண்டு அங்கீகாரம் பெற்றது[1].
இக்கல்லூரியுடன் தொடர்புடையவர்கள்
- கவிக்கோ பேராசிரியர். அப்துல் ரகுமான்
- முனைவர் பேராசிரியர் மு.ஹி.ஜவாஹிருல்லா
- பேராசிரியர் தி. மு. அப்துல் காதர்