அலுமினியம் சல்பைடு

அலுமினியம் சல்பைடு (Aluminum sulfide ) என்பது Al2S3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நிறமற்ற இச்சேர்மம் பல்வேறு கட்டமைப்புகளில் காணப்படுகிறது. ஈரத்தால் கூட பாதிக்கப்பட்டு நீரேறிய அலுமினியம் ஆக்சைடுகள்/ ஐதராக்சைடுகளாக நீராற்பகுக்கப்படுகிறது [1]. சல்பைடு சேர்மம் சுற்றுச்சுழலில் வெளிப்படும்போதே இம்மாற்றம் தொடங்குகிறது. நீராற்பகுப்பு வினையின்போது வாயுநிலை ஐதரசன் சல்பைடு உருவாகிறது.

அலுமினியம் சல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அலுமினியம் சல்பைடு
இனங்காட்டிகள்
1302-81-4 N
ChemSpider 140154 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16684788
பண்புகள்
Al2S3
வாய்ப்பாட்டு எடை 150.158 கிராம்/மோல்
தோற்றம் சாம்பல் நிற திண்மம்
அடர்த்தி 2.02 g/cm3
உருகுநிலை
கொதிநிலை 1,500 °C (2,730 °F; 1,770 K) பதங்கமாகும்
சிதைவடையும்
கரைதிறன் அசிட்டோனில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-724 கிலோயூல்/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
116.9 யூல்/மோல் கெல்வின்
வெப்பக் கொண்மை, C 105.1 யூல்/மோல் கெல்வின்
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

படிகக் கட்டமைப்பு

ஆறுக்கு மேற்பட்ட படிகக் கட்டமைப்புகளில் அலுமினியம் சல்பைடு இருப்பதாக அறியப்படுகிறது என்றாலும் ஒரு சில மட்டும் இங்கு பட்டியலிடப்படுகிறது. இவற்றில் பலவும் ஒன்றுபோல உர்ட்சைட்டு கட்டமைப்பில் அணிக்கோவை காலியிடங்கள் ஒழுங்கமைப்பில் மட்டும் வேறுபடுகின்றன. இதனால் சீரான அல்லது சீரற்ற துணை அணிக்கோவைகள் உருவாகின்றன [2][3].

வடிவம்சீரொழுங்குஇடக்
குழு
a (A)c (A)ρ (கிராம்/செ.மீ3)
αஅறுகோணம்6.42317.832.32
βஅறுகோணம்P63mc3.5795.8292.495
γமுக்கோணம்6.4717.262.36
δநாற்கோணம்I41/amd7.02629.8192.71

β மற்றும் γ கட்டங்கள் அதிக நிலைப்புத்தன்மை கொண்ட α-Al2S3 கட்டத்தை பலநூறு பாகை செல்சியசு வெப்பநிலைக்கு காய்ச்சி குளிரவைத்துப் பெறப்படுகிறது [4]. அலுமினியம் சல்பைடை 2-65 கிலோபார் அழுத்தத்திற்கு உட்படுத்துவதன் மூலமாக δ கட்டம் உருவாகிறது. நாற்கோண ஒழுங்கமைப்பின் மீ அணிக்கோவையில் காலியிடங்கள் ஒழுங்கமைக்கப்படுகின்றன [5].

Al2O3 போல Al(III) மையங்கள் எண்முகத் துளைகளை ஆக்ரமிப்பு செய்யாமல் Al2S3 இன் நன்கு விரிவடைந்த சட்டத்திற்குள் Al(III) மையங்கள், சல்பைடு எதிர்மின் அயனிகள் சீரமைக்கப்பட்டுள்ள அறுகோண நெருக்கப் பொதிவு கட்டமைப்பின் நான்முக துளைகளில் மூன்றில் ஒருபகுதியில் நிலை நிறுத்துகின்றன.

உயர் வெப்பநிலைகளில் Al(III) மையங்கள் சமச்சீரற்றதாகி சீர்குலைந்த உர்ட்சைட்டு கட்டமைப்பாக மாறுகின்றன. மேலும் உயர் வெப்பநிலைகளில் γ-Al2S3 வடிவம் γ-Al2O3 வடிவமொத்த கட்டமைப்பில் உறுதிப்படுகின்றன. Al2S3 இன் மூலக்கூற்று வழிப்பொருட்கள் எவையும் அறியப்படவில்லை. இருப்பினும் Al-S-Cl கலப்பு சேர்மங்களும் Al2Se3 மற்றும் Al2Te3 சேர்மங்களும் அறியப்படுகின்றன.

தயாரிப்பு

அலுமினியத்தையும் கந்தகத்தையும் சேர்த்து எரிப்பதால் அலுமினியம் சல்பைடு கிடைக்கிறது [6]

2 Al + 3 S → Al2S3.

இவ்வினை அதிமான வெப்ப உமிழ்வினை என்பதால் வினைபடு பொருள்களின் முழு அளவையும் சூடுபடுத்த அவசியமில்லை. தேவையான அளவுக்கு ஒரு சிறு அளவுக்கு மட்டுமே அலுமினியம் கந்தகம் கலவையை எடுத்துக் கொண்டு வெப்பப்படுத்த வேண்டும். விளைபொருள் இணைந்த வடிவத்தில் உருவாகிறது. அதன் வெப்பநிலை 1100 பாகை செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பத்தை அடைகிறது. உருகலானது எஃகைப் போல உருகி அதிகக் கடினத்தன்மையை அடைகிறது.

மேற்கோள்கள்

  1. Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.
  2. Hans Landolt; D. Bimberg, Richard Börnstein; Richard Börnstein (1982). Halbleiter. Springer. பக். 12–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-540-13507-4. https://books.google.com/books?id=suSjL5FLV30C&pg=PA12. பார்த்த நாள்: 23 September 2011.
  3. Flahaut J. Ann. Chim. (Paris) 7 (1952) 632–696
  4. Krebs, Bernt; Schiemann, Anke; läGe, Mechtild (1993). "Synthese und Kristallstruktur einer Neuen hexagonalen Modifikation von Al2S3 mit fünffach koordiniertem Aluminium". Zeitschrift für anorganische und allgemeine Chemie 619 (6): 983. doi:10.1002/zaac.19936190604.
  5. Donohue, P (1970). "High-pressure spinel type Al2S3 and MnAl2S4". Journal of Solid State Chemistry 2: 6. doi:10.1016/0022-4596(70)90024-1. Bibcode: 1970JSSCh...2....6D.
  6. McPherson, William (1913). Laboratory manual. Boston: Ginn and Company. பக். 445. https://books.google.com/books?id=oaMe7OtctlIC&q=%22aluminium+sulfide%22&dq=%22aluminium+sulfide%22&hl=en&sa=X&ei=GasdUoqIFoG2iwKHjYDIAg&ved=0CDsQ6AEwAzgU.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.