அலுமினியம் ஒற்றைபுரோமைடு

அலுமினியம் ஒற்றைபுரோமைடு [1] (Aluminium monobromide ) என்பது AlBr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அலுமினியம் மோனோபுரோமைடு, அலுமினியம் புரோமைடு என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. உயர் வெப்பநிலையில் அலுமினியம் உலோகமும் ஐதரசன் புரோமைடும் வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது. அறை வெப்பநிலைக்கு அருகில் இச்சேர்மம் விகிதச்சமமின்றி பிரிகை அடைகிறது.

அலுமினியம் ஒற்றைபுரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
அலுமினியம் மோனோபுரோமைடு; அலுமினியம் புரோமைடு;
இனங்காட்டிகள்
22359-97-3
பண்புகள்
AlBr
வாய்ப்பாட்டு எடை 106.89 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

6/n "[AlBr]n" → Al2Br6 + 4 Al

இந்த வினை 1000 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மீள்வினையாகிறது.

அலுமினியம் மற்றும் புரோமின் சேர்ந்து உருவாகும் சேர்மங்களில் அலுமினியம் முப்புரோமைடு அதிக நிலைப்புத் தன்மை கொண்ட சேர்மமாக உள்ளது.

மேற்கோள்கள்

  1. Aluminum monobromide, NIST Standard Reference Data Program
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.