அலுமினியம் இருபோரைடு

அலுமினியம் இருபோரைடு அல்லது அலுமினியம் டைபோரைடு (Aluminium diboride) என்ற வேதிச் சேர்மம் அலுமினியத்துடன் உலோகப்போலியான போரான் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. அலுமினியமும் போரானும் இணைந்து உருவாகும் இரண்டு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். இதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு (AlB2) ஆகும். அலுமினியம் பன்னிருபோரைடு (AlB12) என்பது மற்றொரு சேர்மமாகும். இவ்விரு சேர்மங்களும் பொதுவாக அலுமினியம் போரைடு என்று அழைக்கப்படுகின்றன.

அலுமினியம் இருபோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அலுமினியம் இருபோரைடு
வேறு பெயர்கள்
அலுமினியம் போரைடு
அலுமினியம் இருபோரைடு
இனங்காட்டிகள்
12041-50-8 Y
ChemSpider 21171253 Y
EC number 234-923-7
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
AlB2
வாய்ப்பாட்டு எடை 48.604 கி/மோல்
தோற்றம் செப்பு-சிவப்புத் திண்மம்
அடர்த்தி 3.19 கி/செமீ³
உருகுநிலை
கரையாதது
கட்டமைப்பு
படிக அமைப்பு Hexagonal, hP3
புறவெளித் தொகுதி P6/mmm, No. 191
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-151 கிஜூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
34.7 ஜூ/மோல் கெ
வெப்பக் கொண்மை, C 43.6 ஜூ/மோல் கெ
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

அமைப்புரீதியாக, போரான் அணுக்கள் அலுமினியம் அணுக்களை இடையில் கொண்டிருக்கும் கடுங்கரித் தகடுகளாக உருவாகிறது. இது மக்னீசியம் இருபோரைடின் அமைப்பை மிகவும் ஒத்துள்ளது. ஒற்றை அலுமினியம் இருபோரைடு படிகங்கள் அடிப்படை அறுங்கோண தளத்தின் அச்சுக்கு இணையாக உலோக கடத்திகளாக திகழ்கின்றன.[1]

அமிலங்கள் மற்றும் ஐதரசன் வாயுவுடன் வினைபுரிகையில் நச்சு வாயுக்களை உற்பத்தி செய்வதால் அலுமினியம் போரைடு ஒரு அபாயகரமான பொருளாகக் கருதப்படுகிறது. உதாரணமாக இது ஐதரோகுளோரிக் அமிலத்துடன் வினைபுரிந்து போரேன் மற்றும் அலுமினியம் குளோரைடை வெளிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. "On the electronic and structural properties of aluminum diboride Al0.9B2" Burkhardt, Ulrich; Gurin, Vladimir; Haarmann, Frank; Borrmann, Horst; Schnelle, Walter; Yaresko, Alexander; Grin, Yuri Journal of Solid State Chemistry 177 (2004) 389-394

இவற்றையும் காண்க

  • போரைடு

வெளி இனைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.