குரோமியம்(III) சல்பைடு

குரோமியம்(III) சல்பைடு (Chromium(III) Sulfide) என்பது Cr2S3 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது குரோமியத்தின் மூவிணைய திறன் சல்பைடு உப்பு ஆகும்.

குரோமியம்(III)சல்பைடு
Chromium(III) Sulfide
இனங்காட்டிகள்
12018-22-3 Y
EC number 234-638-8
பப்கெம் 159397
பண்புகள்
Cr2S3
வாய்ப்பாட்டு எடை 200.19 கி/மோல்
தோற்றம் பழுப்பும் கருப்பும் கலந்த நிறம்
மணம் மணமற்றது
அடர்த்தி 3.77 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் குரோமியம்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

தயாரிப்பு

குரோமியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் புளோரைடு வினைபுரிவதால் குரோமியம்(III) சல்பைடு உண்டாகிறது.

பண்புகள்

குரோமியம்(III) சல்பைடு பழுப்பும் கருப்பும் கலந்த நிறத்தில் தூளாகக் காணப்படுகிறது. தண்ணீரில்[1] கரையாத இச்சேர்மம் 1350 0 செல்சியசு வெப்பநிலையில் உருகுகிறது. குறைவான நிலைப்புத்தன்மை கொண்ட இச்சேர்மம் தேவையான அளவுக்குச் சூடாக்கும் போது காற்று அல்லது ஆக்சிசனால் ஆக்சிசனேற்றப்படுகிறது.

பாதுகாப்பு

மனிதர்களிடம் புற்றுநோய் ஊக்கியாக குரோமியம்(VI) இருக்கிறது என்பது உறுதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. மற்ற குரோமியம் உப்புகளுடன் ஒப்பிடுகையில் குரோமியம்(III) சல்பைடு தண்ணீரில் குறைந்த அளவில் கரையும் என்பதால் குறைவான நச்சுத்தன்மை கொண்டதாக விளங்குகிறது. குரோமியம்(III) குரோமியம்(IV) உப்புகளாக ஆக்சிசனேற்றம் அடையும்போது அதிகமான நச்சுத்தன்மையும் புற்று நோயாக்கும் தன்மையும் உண்டாகிறது. எனவே குரோமியத்தைப் பகுதிப் பொருளாகக் கொண்டுள்ள சேர்மங்களைக் கையாளும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு உடலுக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.