1714
1714 (MDCCXIV) ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டு (நெட்டாண்டு அல்ல) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1714 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1714 MDCCXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1745 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2467 |
அர்மீனிய நாட்காட்டி | 1163 ԹՎ ՌՃԿԳ |
சீன நாட்காட்டி | 4410-4411 |
எபிரேய நாட்காட்டி | 5473-5474 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1769-1770 1636-1637 4815-4816 |
இரானிய நாட்காட்டி | 1092-1093 |
இசுலாமிய நாட்காட்டி | 1125 – 1126 |
சப்பானிய நாட்காட்டி | Shōtoku 4 (正徳4年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1964 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரியன் நாட்காட்டி | 4047 |
நிகழ்வுகள்
- மார்ச் 7 - ஆஸ்திரியாவிற்கும் பிரான்சிற்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டதில் எசுப்பானிய வாரிசுரிமைப் போர் முடிவுக்கு வந்தது. ஆத்திரியா இத்தாலியில் உள்ள எசுப்பானியப் பிரதேசங்களான நேப்பில்சு இராச்சியம், மிலான், சார்டீனியா, தெற்கு நெதர்லாந்து ஆகியவற்றை எசுப்பானியாவிடம் இருந்தும், பிரான்சிடம் இருந்து பிரீபர்க், லான்டோ ஆகிய இடங்களை பிரான்சிடம் இருந்து பெற்றுக் கொண்டது. இதன் மூலம் ஆஸ்திரியாவின் ஹாப்சுபர்க் பேரர்சு தனது எல்லையை விரிவு படுத்திக் கொண்டது.
- சூலை - பெரிய பிரித்தானியாவின் நாடாளுமன்றம் நிலநிரைக்கோட்டைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பவருக்கு £20,000 வரை பெரும் பரிசை அறிவித்தது.
- சூலை 27 - காங்குட் என்ற இடத்தில் உருசியக் கடற்படை சுவீடியக் கடற்படையுடன் மோதிப் பெரும் வெற்றி கண்டது.
- ஆகஸ்டு 1 - ஆன் மகாராணியின் இறப்பை அடுத்து முதலாம் ஜார்ஜ் மன்னர் பிரித்தானிய அரசனாக முடிசூடினார்.
- டிசம்பர் 9 - உதுமானியப் பேரரசு வெனிசுக் குடியரசு மீது போரை அறிவித்தது.
பிறப்புகள்
இறப்புகள்
- இரண்டாம் நரசராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1673)
மேற்கோள்கள்
1714 நாற்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.