முதலாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)

புனித முதலாம் சிக்ஸ்துஸ் (Pope Saint Sixtus I) என்னும் திருத்தந்தை உரோமை ஆயராக கி.பி. 117 (அ) 119இலிருந்து 126 (அ) 128 வரை பணியாற்றினார்[1]. அவருக்கு முன் பதவியிலிருந்தவர் புனித முதலாம் அலெக்சாண்டர் என்பவர்; அவருக்குப் பின் பதவி ஏற்றவர் டெலஸ்ஃபோருஸ் என்பவர். மிகப்பழைய ஏடுகளில் "சிக்ஸ்துஸ்" என்னும் பெயர்கொண்ட முதல் மூன்று திருத்தந்தையர்களின் பெயர்களும் "Xystus" என்று எழுதப்பட்டுள்ளன.

  • சிக்ஸ்துஸ் என்னும் பெயர் (பண்டைக் கிரேக்கம்: Xystos; இலத்தீன்: S(e)xtus) இலத்தீனில் "ஆறாமவர்" என்றும் கிரேக்கத்தில் "இணைக்கப்பட்டவர்" என்றும் பொருள்படும்.
புனித முதலாம் சிக்ஸ்துஸ்
Saint Sixtus I
7ஆம் திருத்தந்தை
ஆட்சி துவக்கம்கிபி 117 (அ) 119
ஆட்சி முடிவுகிபி 126 (அ) 128
முன்னிருந்தவர்முதலாம் அலெக்சாண்டர்
பின்வந்தவர்டெலஸ்ஃபோருஸ்
பிற தகவல்கள்
இயற்பெயர்சிக்ஸ்துஸ்
பிறப்புகிபி 42
உரோமை, இத்தாலியா
இறப்புகிபி 126 (அ) 128
உரோமை, இத்தாலியா
புனிதர் பட்டமளிப்பு
திருவிழாஏப்பிரல் 6
பகுப்புமறைச்சாட்சி
சிக்ஸ்துஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

"திருத்தந்தையர் ஆண்டுக் குறிப்பு" (Annuario Pontificio) (2003) என்னும் ஏட்டின்படி, முதலாம் சிக்ஸ்துஸ் உரோமையைச் சார்ந்தவர். அவரது ஆட்சிக்காலம் கி.பி. 117இலிருந்து 126 வரை, அல்லது 119இலிருந்து 128 வரை ஆகும்.

"லிபேரியக் குறிப்பேடு" (Liberian Catalogue) தரும் தகவல்படி, முதலாம் சிக்ஸ்துஸ் ஹேட்ரியன் மன்னன் காலத்தில் 117-126 ஆண்டுக்காலத்தில் பதவியிலிருந்தார்.

யூசேபியஸ் தரும் தகவல்

கி.பி. 3-4 நூற்றாண்டுகளில் வாழ்ந்த யூசேபியஸ் என்னும் கிறித்தவ வரலாற்றாசிரியர் இரு வேறான மூல நூல்களைப் பயன்படுத்தி, திருத்தந்தை சிக்ஸ்துஸ் 114-124 ஆண்டுகளில் பணிசெய்தார் என்று "குறிப்பேடு" (Chronicon) என்னும் நூலிலும், 114-128 ஆண்டுகளில் பணிசெய்தார் என்று "திருச்சபை வரலாறு" (Historia Ecclesiastica) என்னும் நூலிலும் கூறுகிறார்.

ஆண்டுகளைக் குறிப்பதில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தாலும், எல்லா ஆசிரியர்களும் திருத்தந்தை சிக்ஸ்துஸ் ஏறக்குறைய 10 ஆண்டுகள் பதவி வகித்தார் என்று தெளிவாகக் கூறுகின்றனர்.

ஆற்றிய பணிகள்

"திருத்தந்தையர் நூல்" (Liber Pontificalis) என்னும் பண்டைய ஏட்டின்படி, முதலாம் சிக்ஸ்துஸ் கீழ்வரும் பணிகளை ஆற்றினார்:

  • கோவில் வழிபாட்டிற்குப் பயன்படும் கலன்களைத் திருப்பணியில் ஈடுபடும் திருப்பணியாளர் தவிர வேறு யாரும் தொடலாகாது என்று சட்டம் இயற்றினார்.
  • திருத்தந்தையால் உரோமைக்கு எந்த ஆயராவது அழைக்கப்பட்டால், அவர் தம் மறைமாவட்டத்திற்குத் திரும்பிச் செல்லும்போது திருத்தந்தையின் அனுமதிப் பத்திரம் பெற்றிருக்க வேண்டும் என்று சட்டம் வகுத்தார்.
  • திருப்பலியில் புகழுரைக்குப் பின் "தூயவர்" என்னும் உரைக்கூற்றைக் குருவும் மக்களோடு சேர்ந்து சொல்ல வேண்டும் என்று விதித்தார்.

திருப்பலியில் நினைவுகூரப்படும் "சிக்ஸ்துஸ்"

உரோமை வழிபாட்டு முறையில் திருப்பலியின்போது நினைவுகூரப்படும் "சிக்ஸ்துஸ்" இவரல்ல; அவர் "இரண்டாம் சிக்ஸ்துஸ்" ஆவார்.

முதலாம் சிக்ஸ்துசின் திருவிழா ஏப்பிரல் 6ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

விக்கிமேற்கோள்: இணைப்பு

முதலாம் சிக்ஸ்துஸ் - மேற்கோள்கள்

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
முதலாம் அலெக்சாண்டர்
உரோமை ஆயர்
திருத்தந்தை

115125
பின்னர்
டெலஸ்ஃபோருஸ்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.