தமிழ்நாடு இசை மற்றும் நுண் கலைகள் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் (Tamil Nadu Dr. J. Jayalalithaa Music and Fine Arts University - TNJMFAU), தமிழக இசை மற்றும் நுண்கலைகளை வளர்ப்பதற்காக 2013-இல் தமிழ்நாடு அரசு சென்னையில் நிறுவிய பல்கலைக்கழகம் ஆகும். [1][2][3]இப்பல்கலைக்கழகம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர். ஜெ. ஜெயலலிதா அவர்களின் பெயரில் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் | |
---|---|
குறிக்கோள்: | பயிற்சி பண்படுத்தும் |
நிறுவல்: | 2013 |
வகை: | அரசு பல்கலைக்கழகம் |
வேந்தர்: | தமிழக முதல்வர் |
துணைவேந்தர்: | டாக்டர். ப்ரமீலா குருமூர்த்தி |
அமைவிடம்: | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
முந்தைய பெயர்கள்: | தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் |
விளையாட்டில் சுருக்கப் பெயர்: | த.நா.ஜெ.இ.க.க.ப |
இணையத்தளம்: | tnmfau.ac.in |
பியிற்றுக்கும் படிப்புகள்
இளங்களை மற்றும் முதுகலை இசை (M. A (Music))
- வாய்ப்பாட்டு
- வயலின்
- மிருதங்கம்
- நாகஸ்வரம்
- பரத நாட்டியம்
- இசையியல்
இளங்கலை மற்றும் முதுகலை நுண்கலைகள் (M. F. A)
முதுகலை பட்டைய படிப்புகள்
- இசை மற்றும் கவின் கலைகள் படிப்பு
தொடர்பு முகவரி
தமிழ்நாடு டாக்டர். ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம், டாக்டர். டி. ஜி. எஸ். தினகரன் சாலை, சென்னை - 600 028 தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044-24629036 மின்னஞ்சல்: tnmfauvc@gmail.com
இப்பல்கலைகழகத்துடன் இணைக்கப்பட்ட உறுப்பு நிறுவனங்கள்
- தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
- அரசு சிற்பக் கல்லூரி
- எம். ஜி. ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம்
- இராணி மெய்யம்மை ஆச்சி தமிழ் இசைக் கல்லூரி
- சிறீ அன்னை காமாட்சி கலைக்கூடம்
- பிரிட்ஜ் கவின் கலைகள் அகாதமி
- கலைக்காவேரி கவின் கலைகள் கல்லூரி
- அரசு கவின் கலைகள் கல்லூரி
- தியாகராசர் இசைக் கல்லூரி
- ரவிராஜ் கவின் கலைகள் கல்லூரி
- மெக்கன்ஸ் ஊட்டி கட்டிடவடிவமைப்பு நிறுவனம்
- அழகப்பா நிகழ்த்துக் கலைக் கல்லூரி
- சென்னை திரைப்பட தொழில் பள்ளி
- ஸ்ரீ ரேகானுகாம்பாள் கவின் கலைகள் மற்றும் கைவினைக் கல்லூரி
- பால்மி டியோர் திரைப்பட மற்றும் ஊடக கல்லூரி
மேற்கோள்கள்
- "State University ,Tamil Nadu". University Grants Commission. பார்த்த நாள் 20 July 2016.
- "Tamil Nadu government to set up music and fine arts university". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (29 October 2013). பார்த்த நாள் 20 July 2016.
- "Sign up for Off-Campus Music, Art Diploma Courses". New Indian Express (26 August 2015). பார்த்த நாள் 20 July 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.