வெளியுறவுத் துறை அமைச்சர் (இந்தியா)
வெளிவிவகாரத் துறை அமைச்சர் அல்லது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் என்பது இந்திய அரசின் அமைச்சரவையில் உள்ள ஒரு ஆய அமைச்சரைக் குறிக்கிறது. இந்தியாவையும் அதன் அரசையும் சர்வதேச குமுகாயத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்படுவது இவரது கடமைகளுள் ஒன்றாகும். இந்த அமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தலைவராக இருப்பார். அவ்வப்போது இளநிலை அமைச்சர் ஒருவர் மாநிலங்களுக்கான வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு அவர் அமைச்சருக்கு உறுதுணையாக இருப்பார். சில வேளைகளில் துணை அமைச்சர் ஒருவர் இரண்டாம் நிலையில் நியமிக்கப்படுகிறார்.
வெளிவிவகாரத் துறை அமைச்சர் (Videsh Mantri) | |
---|---|
![]() | |
நியமிப்பவர் | பிரதமரின் பரிந்துரையின் பேரில் இந்தியக் குடியரசுத் தலைவர் |
முதலாவதாக பதவியேற்றவர் | ஜவகர்லால் நேரு |
உருவாக்கம் | 2 செப்டம்பர் 1946 |
இந்தியக் குடியரசு |
---|
![]() |
இந்திய அரசு வலைவாசல் |
தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சராக சுப்பிரமணியம் செயசங்கர் செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்
No | பெயர் | தொடக்கம் | முடிவு | மற்ற பதவிகள் | கட்சி | மக்களவை (பதவியேற்ற முறை) ^[1] |
---|---|---|---|---|---|---|
1. | ஜவகர்லால் நேரு | 2 செப்டம்பர் 1946 | 27 மே 1964 | பிரதமர் | இதேகா | 1வது 2வது 3வது (4வது) |
2. | குல்சாரிலால் நந்தா | 27 மே 1964 | 9 சூன் 1964 | பிரதமர் | இதேகா | 3வது (1வது) |
3. | லால் பகதூர் சாஸ்திரி | 9 சூன் 1964 | 17 சூலை 1964 | பிரதமர் | இதேகா | 3வது (1வது) |
4. | சர்தார் சுவரண் சிங் | 18 சூலை 1964 | 14 நவம்பர் 1966 | இதேகா | 3வது (1வது) | |
5. | எம். சி. சாக்ளா | 14 நவம்பர் 1966 | 5 செப்டம்பர் 1967 | இதேகா | 3வது 4வது (1வது) | |
6. | இந்திரா காந்தி | 6 செப்டம்பர் 1967 | 13 பெப்ரவரி 1969 | பிரதமர் | இதேகா | 4வது (1வது) |
7. | தினேஷ் சிங் | 14 பெப்ரவரி 1969 | 27 சூன் 1970 | காங்கிரசு (ஆர்) | 4வது (1வது) | |
8. | சர்தார் சுவரண் சிங் | 27 சூன் 1970 | 10 அக்டோபர் 1974 | காங்கிரசு (ஆர்) | 4வது 5வது (2வது) | |
9. | ஒய். பி. சவான் | 10 அக்டோபர் 1974 | 24 மார்ச் 1977 | காங்கிரசு (ஆர்) | 5வது (1வது) | |
10. | அடல் பிகாரி வாச்பாய் | 26 மார்ச் 1977 | 28 சூலை 1979 | ஜனதா | 6வது (1வது) | |
11. | ஷ்யாம் நந்தன் பிரசாத் மிஷ்ரா | 28 சூலை 1979 | 13 சனவரி 1980 | 6வது (1வது) | ||
12. | பி. வி. நரசிம்ம ராவ் | 14 சனவரி 1980 | 19 சூலை 1984 | காங் (இ) | 7வது (1வது) | |
13. | இந்திரா காந்தி | 19 சூலை 1984 | 31 அக்டோபர் 1984 | பிரதமர் | காங்(இ) | 7வது (3வது) |
14. | ராஜீவ் காந்தி | 31 அக்டோபர் 1984 | 24 செப்டம்பர் 1985 | பிரதமர் | காங்(இ) | 7வது 8வது (1வது) |
15. | பாலி ராம் பகத் | 25 செப்டம்பர் 1985 | 12 மே 1986 | காங்(இ) | 8வது (1வது) | |
16. | பி. ஷிவ் ஷங்கர் | 12 மே 1986 | 22 அக்டோபர் 1986 | காங்(இ) | 8வது (1வது) | |
17. | நா. த. திவாரி | 22 அக்டோபர் 1986 | 25 சூலை 1987 | காங்(இ) | 8வது (1வது) | |
18. | ராஜீவ் காந்தி | 25 சூலை 1987 | 25 சூன் 1988 | பிரதமர் | காங்(இ) | 8வது (2வது) |
19. | பி. வி. நரசிம்ம ராவ் | 25 சூன் 1988 | 2 திசம்பர் 1989 | காங்(இ) | 8வது (1வது) | |
20. | வி. பி. சிங் | 2 திசம்பர் 1989 | 5 திசம்பர் 1989 | பிரதமர் | ஜனதா தளம் | 9வது (1வது) |
21. | ஐ. கே. குஜரால் | 5 திசம்பர் 1989 | 10 நவம்பர் 1990 | ஜனதா தளம் | 9வது (1வது) | |
22. | வித்யா சரண் சுக்லா | 21 நவம்பர் 1990 | 20 பெப்ரவரி 1991 | சமாஜ்வாதி ஜனதா | 9வது (1வது) | |
23. | மாதவ்சிங் சோலங்கி | 21 சூன் 1991 | 31 மார்ச் 1992 | காங்(இ) | 10வது (1வது) | |
24. | பி. வி. நரசிம்ம ராவ் | 31 மார்ச் 1992 | 18 சனவரி 1993 | பிரதமர் | காங்(இ) | 10வது (2வது) |
25. | தினேஷ் சிங் | 18 சனவரி 1993 | 10 பெப்ரவரி 1995 | காங்(இ) | 10வது (2வது) | |
26. | பிரணப் முக்கர்ஜி | 10 பெப்ரவரி 1995 | 16 மே 1996 | திட்டக்குழு துணைத் தலைவர் | காங்(இ) | 10வது (1வது) |
27. | சிக்கந்தர் பக்த் | 21 மே 1996 | 1 சூன் 1996 | பாஜக | 11வது (1வது) | |
28. | ஐ. கே. குஜரால் | 1 சூன் 1996 | 18 மார்ச் 1998 | பிரதமர் | ஜனதா தளம் | 11வது (2வது) |
29. | அடல் பிகாரி வாச்பாய் | 19 மார்ச் 1998 | 5 திசம்பர் 1998 | பிரதமர் | பாஜக | 12வது (2வது) |
30. | ஜஸ்வந்த் சிங் | 5 திசம்பர் 1998 | 23 சூன் 2002 | பாஜக | 12வது 13வது (1வது) | |
31. | யஷ்வந்த் சின்கா | 1 சூலை 2002 | 22 மே 2004 | பாஜக | 13வது (1வது) | |
32. | கே. நட்வர் சிங் | 22 மே 2004[2] | 6 நவம்பர் 2005[3] | இதேகா | 14வது (1வது) | |
33. | மன்மோகன் சிங் | 6 நவம்பர் 2005[3] | 24 அக்டோபர் 2006[4] | பிரதமர் | இதேகா | 14வது (1வது) |
34. | பிரணப் முக்கர்ஜி | 24 அக்டோபர் 2006[4] | 22 மே 2009 | இதேகா | 14வது (2வது) | |
35. | சோ. ம. கிருசுணா | 22 மே 2009 | 28 அக்டோபர் 2012 | இதேகா | 15வது | |
36. | சல்மான் குர்சித் | 28 அக்டோபர் 2012 | 26 மே 2014 | இதேகா | 15வது | |
37. | சுஷ்மா சுவராஜ் | 26 மே 2014 | 30 மே 2019 | பாஜக | 16வது | |
38. | சுப்பிரமணியம் செயசங்கர் | 31 மே 2019 | தற்போதுவரை | பாஜக | 17வது |
மேற்கோள்கள்
- Ministry of External Affairs Library Website accessed 24 அக்டோபர், 2006.
- Rediff.com dated 22 மே 2004, accessed 25 அக்டோபர் 2006.
- BBC News dated 7 நவம்பர் 2005, accessed 25 அக்டோபர் 2006.
- The Hindu dated 25 அக்டோபர் 2006, accessed 25 அக்டோபர் 2006.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.