இந்திய துணைப் பிரதமர்

இந்திய துணை பிரதமர் இந்திய அரசின் மத்திய அமைச்சரவையில் ஒரு உறுப்பினர் ஆவார். பொதுவாக ஒரு துணை பிரதமர், உள்துறை அமைச்சகம் அல்லது நிதி அமைச்சகம் போன்ற ஒரு முக்கிய அமைச்சரவையை தன் இலாகாவாக வைத்திருப்பார். துணை பிரதம மந்திரி பதவி அதிகாரப்பூர்வமற்றது, இருப்பினும் இது ஒரு கூட்டணி அரசாங்கத்தின் போதும் அல்லது தேசிய அவசர காலங்களிலும், அரசியல் ஸ்திரத்தன்மைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]

இந்திய துணைப் பிரதமர்களின் பட்டியல்

எண் படம் பதவிக்காலம் கட்சி
(கூட்டனி)
பிரதமர்
1 வல்லபாய் பட்டேல்

(உள்துறை அமைச்சகம்)

15 ஆகஸ்ட் 1947 15 டிசம்பர் 1950 இந்திய தேசிய காங்கிரசு ஜவஹர்லால் நேரு
2 மொரார்ஜி தேசாய்

(நிதி அமைச்சகம்)

21 மார்ச் 1967 6 டிசம்பர் 1969 இந்திய தேசிய காங்கிரசு இந்திரா காந்தி
3 சரண் சிங்

(உள்துறை அமைச்சகம் & நிதி அமைச்சகம்)

24 மார்ச் 1977 28 ஜீலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
4 ஜெகசீவன்ராம்

(பாதுகாப்புத் துறை அமைச்சகம்)

24 மார்ச் 1977 28 ஜீலை 1979 ஜனதா கட்சி மொரார்ஜி தேசாய்
5 யஷ்வந்த்ராவ் சவான்

(உள்துறை அமைச்சகம்)

28 ஜீலை 1979 14 ஜனவரி 1980 காங்கிரஸ் (அர்ஸ்) சரண் சிங்
6 சவுத்ரி தேவி லால் 2 டிசம்பர் 1989 21 ஜீன் 1991 ஜனதா தளம்
(தேசிய முண்ணனி)
வி. பி. சிங்
சந்திரசேகர்
7 லால் கிருஷ்ண அத்வானி

(உள்துறை அமைச்சகம்)

29 ஜீன் 2002 22 மே 2004 பாரதிய ஜனதா கட்சி
(தேசிய ஜனநாயகக் கூட்டணி)
அடல் பிகாரி வாச்பாய்

சான்றுகள்

  1. "துணைப் பிரதமர் பட்டியல்". பார்த்த நாள் ஆகத்து 21, 2015.

வார்ப்புரு:இந்திய அரசின் கூறு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.