இழான் பவுல் சார்த்ர
பொதுவாக இழான் பவுல் சார்த்ர எனப்படும் இழான் பவுல் சார்லசு அய்மார்ட் சார்த்ர (Jean-Paul Charles Aymard Sartre 21 சூன் 1905 – 15 ஏப்ரல் 1980) ஒரு இருப்பியல்வாத மெய்யியலாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், அரசியலாளரும், இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் பிரான்சிய மெய்யியல் துறையில் முதன்மையான இடத்தில் உள்ளோர்களில் ஒருவர்.
மேலைநாட்டு மெய்யியல் 20ஆம்-நூற்றாண்டு மெய்யியல் | |
---|---|
முழுப் பெயர் | இழான் பவுல் சார்த்ர |
பிறப்பு | 21 சூன் 1905 (பாரிசு, பிரான்சு) |
இறப்பு | 15 ஏப்ரல் 1980 74) (பாரிஸ், பிரான்ஸ்) | (அகவை
சிந்தனை மரபு(கள்) | இருப்பியல்வதம், மார்க்சியம் |
முக்கிய ஆர்வங்கள் | மீவியற்பியல், அறிவாய்வியல், நெறிமுறை, அரசியல், தோற்றப்பாட்டியல், உள்ளியம் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | "Existence precedes essence" "Bad faith" "Nothingness" |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
1964 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது ஆனாலும் இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இழான் பவுல் சார்த்ர என்று கையெழுத்து இடுவதும், இழான் பவுல் சார்த்ர, நோபல் பரிசு வெற்றியாளர் என்று கையொப்பமிடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தான் ஒரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றார் அவர்.
கூற்றுக்கள்
- "எனக்காக தெரிவுகளை மேற்கொள்கையில், முழு மனித இனத்துக்காக தெரிவு செய்கிறோம்."
- "மனிதன் விடுதலையாய் இருக்கக் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறான். ஏன் என்றால், அவன் உலகினுள் தூக்கி வீசப்பட்ட பின்பு அவனது செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாளியாகிறான்."
- "தீயவை மனிதன் நெருக்கமான, நேரடியான ஒன்றை நுண்புலமாக ஆக்குவதால் விளைந்தவை."
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.