டோரிஸ் லெசிங்

டோரிஸ் லெசிங் (Doris Lessing) பிரித்தானிய புதின, நாடக எழுத்தாளர். ஈரானில்[1] கெர்மன்ழ்சா என்னும் இடத்தில் அக்டோபர் 22, 1919 [2] ஆம் நாள் பிறந்தார். இவ்வாங்கிலேயர் 2007 ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றார். பிரித்தானிய அரசின் உயர் பெருமைப்பட்டங்களாகிய CH[3] "மாண்பின் இணையர்", OBE [4] "பிரித்தானிய பேரரசின் வரிசையர்" முதலிய பட்டங்களைப் பெற்றவர். பிறந்தபொழுது இவருடைய பெயர் டோரிஸ் மே டெய்லர் (Doris May Tayler) என்பதாகும். இவர் எழுதிய த கோல்டன் நோட்புக் என்னும் புதினம் புகழ்பெற்றது.

டோரிஸ் லெசிங்
Doris Lessing

2006 கோல்ன் இலக்கிய விழாவில் லெசிங்
புனைப்பெயர் ஜேன் சோச்ர்சு
தொழில் எழுத்தாளர்
நாடு பிரித்தானியர்
நாட்டுரிமை ரைக்கிய இராச்சியம்
எழுதிய காலம் 1950–2013
இலக்கிய வகை புதினம், சிறுகதை, நாடகம், கவிதை
இயக்கம் நவீனம், பின்நவீனத்துவம், சூபியம், சமூகவுடைமை, பெண்ணியம், அறிவியல் புனைவு
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
துணைவர்(கள்)
  • பிராங்க் சார்ல்சு விஸ்டம் (1939–1943)
  • கோட்பிரீட் லெசிங் (1945–1949)
http://www.dorislessing.org/

இவர் உடல்நலக்குறைவு காரணமாக 2013 நவம்பர் 17 அன்று அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.[5]

பரிசுகள்

  • சொமர்செட் மாம் பரிசு (Somerset Maugham Award) (1954)
  • பலெர்மோ பரிசி (Palermo Prize) (1987)
  • பிரிமியோ இண்டர்நாழ்சனாலெ மொண்டெயோ (Premio Internazionale Mondello) (1987)
  • இலக்கிய நோபல் பரிசு (2007)

மேற்கோள்கள்

  1. "Guardian Unlimited: Doris Lessing". பார்த்த நாள் 2007-10-11.
  2. "Biography". A Reader's Guide to The Golden Notebook & Under My Skin. HarperCollins (1995). பார்த்த நாள் 2007-10-11.
  3. Order of the Companions of Honour
  4. Order of the British Empire
  5. http://www.theguardian.com/books/2013/nov/17/doris-lessing-dies-94

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.