மேகதாது தடுப்பணைத் திட்டம்

மேகேதாட்டு தடுப்பணைத் திட்டம், கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், காவிரி ஆற்றின் குறுக்கே, சிவசமுத்திரம் அருவியின் அருகே, மேகேதாட்டு எனும் இடத்தில் இரு தடுப்பணைகள் கட்டி, நீர்மின் நிலையம் துவக்க கர்நாடக அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. [1]. மேகேதாட்டு அணைத் திட்டம் ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், மேட்டூரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவிலும் செயல்பட உள்ளது.

மேகேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

கர்நாடக அரசு மேகேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி வடிநில மாவட்டங்கள் காவேரி ஆற்று நீர்வரத்து இன்றி, தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கக்கூடும் என்று கருதுவதால், மேகதாது அணைத் திட்டத்திற்கு, தமிழக அரசும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். தமிழக சட்டசபை டிசம்பர் 6 அன்று கூடி இத்திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் இயற்றியுள்ளது. [2][3] .[4].[5]

மேற்கோள்கள்

  1. காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி?
  2. மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
  3. கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌ன் குறு‌க்கே க‌ர்நாடகா பு‌திய அணை - அனும‌தி‌க்க மா‌ட்டோ‌ம் எ‌ன்‌கிறா‌ர் ஜெய‌ல‌லிதா
  4. All steps to 'thwart' attempts to build check dam by Karnataka
  5. காவிரியில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் கடைகள் அடைப்பு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.