நா. முத்துக்குமார்

நா.முத்துக்குமார் (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார்.

நா. முத்துக்குமார்
பிறப்புசூலை 12, 1975(1975-07-12)
காஞ்சிபுரம், தமிழ் நாடு, இந்தியா
இறப்பு14 ஆகத்து 2016(2016-08-14) (அகவை 41)
சென்னை
இறப்பிற்கான
காரணம்
மஞ்சள் காமாலை
பணிபாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர்
வாழ்க்கைத்
துணை
தீபலஷ்மி[1]
பிள்ளைகள்மகன் ஆதவன், மகள் யோகலஷ்மி[1]

வாழ்க்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர்.[2] சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் [3], 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார்.[4]

இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார்.

மறைவு

ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார்.[5][6]

படைப்புகள்

இவர் பாடலெழுதிய சில திரைப்படங்கள்:

இவரது நூல்கள்

  • நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு)
  • கிராமம் நகரம் மாநகரம்
  • பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு)
  • ஆணா ஆவண்ணா (கட்டுரைகள்)
  • என்னை சந்திக்க கனவில் வராதே
  • சில்க் சிட்டி (நாவல்)
  • பால காண்டம் (கட்டுரைகள்)
  • குழந்தைகள் நிறைந்த வீடு (ஹைக்கூ)
  • வேடிக்கை பார்ப்பவன் (கட்டுரைகள்)
  • தூசிகள் (கவிதைகள்)
  • அணிலாடும் முன்றில்… (உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த தொடர்)

விருதுகள்

  • 2005: கஜினி திரைப்படத்திற்காக தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது[7]
  • 2006: வெயில் திரைப்படத்திகாக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது
  • 2009: அயன் திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த பாடலாசிரியர் விருது.
  • 2013: தங்க மீன்கள் படத்தில் "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.
  • 2014: சைவம் திரைப்படத்தில் "அழகே அழகே" பாடலுக்கு, சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருது.

மேற்கோள்கள்

  1. DN (16 ஆகத்து 2016). "என்னுடைய குடும்பத்துக்கு ராயல்டி வழங்கப்படவேண்டும்: நா. முத்துக்குமார் விருப்பம்!". தினமணி. பார்த்த நாள் 16 ஆகத்து 2016.
  2. MALATHI RANGARAJAN (February 7, 2013). "Life's a lyric". The Hindu. Chennai. http://www.thehindu.com/arts/cinema/lifes-a-lyric/article4389301.ece. பார்த்த நாள்: February 08, 2013.
  3. "பிரபல திரைப்பட பாடலாசிரியர் நா. முத்துக்குமார் சென்னையில் காலமானார்". தினத்தந்தி (14 ஆகத்து 2016). பார்த்த நாள் 16 ஆகத்து 2016.
  4. "நா.முத்துக்குமார்… எல்லோருக்கும் பிடித்த பாடலின் மரணம்!". மாற்று. பார்த்த நாள் ஆகத்து 17, 2016.
  5. "பாடலாசிரியர் நா.முத்துகுமார் காலமானார்". Seythigal.com. ஆகத்து 14, 2016. http://www.seythigal.com/?p=11719.
  6. "Shocking: Na Muthukumar passes away due to jaundice and high fever". The Times of India (14 ஆகத்து 2016). பார்த்த நாள் 14 ஆகத்து 2016.
  7. Venkatesan (14 ஆகத்து 2016). "பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்". தினமணி. பார்த்த நாள் 16 ஆகத்து 2016.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.