தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா)

தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (South Central Railway) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் செகந்திராபாத்தில் உள்ளது. இது பெரும்பாலும் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், மகாராட்டிரம் ஆகிய மாநிலங்களுக்கும், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்கும் தன் சேவையை வழங்குகிறது.

தெற்கு மத்திய தொடருந்து மண்டலம்
South Central Railway
दक्षिण मध्य रेलवे
దక్షిణ మద్య రైల్వే
6 - தெற்கு மத்திய தொடருந்து மண்டலம்
Localeதெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், மகாராட்டிரம், கர்நாடகா
இயக்கப்படும் நாள்02 அக்டோபர் 1966தற்போது வரை
Predecessorதென்னக இரயில்வே
ரயில் பாதைMixed
நீளம்5951 km.
தலைமையகம்செகந்திராபாத் தொடருந்து நிலையம்
இணையத்தளம்SCR official website

வரலாறு

2 அக்டோபர் 1966ல்[1] தெற்கு மத்திய தொடருந்து மண்டலமானது, தென்னக இரயில்வேயிடமிருந்து விஜயவாடா கோட்டம் மற்றும் ஹீப்ளி கோட்டத்தையும், மத்திய இரயில்வேயிடமிருந்து சோலாப்பூர் கோட்டம் மற்றும் செகந்திராபாத் கோட்டத்தினையும் பிரித்து உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2 அக்டோபர் 1977ல், தென்னக இரயில்வேயிடமிருந்து குண்டூக்கல் கோட்டம் பிரிக்கப்பட்டு இந்த மண்டலத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் சோலாப்பூர் கோட்டம் மத்திய இரயில்வேயோடு இணைக்கப்பட்டது. பின்பு 17 பிப்ரவரி 1978ல், செகந்திரபாத் கோட்டம் இரண்டாக பிரக்கப்பட்டு ஹைதராபாத் கோட்டம் உருவாக்கப்பட்டது. 1 ஏப்ரல் 2003ல் மண்டலங்கள் மற்றும் கோட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டன, அப்பொழுது இரண்டு புதிய கோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவை குண்டூர் கோட்டம், நாந்தேடு கோட்டம் ஆகும். ஹுப்பள்ளி கோட்டம் பிரிக்கப்பட்டு முழுவதும் புதிய மண்டலமான தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா) உருவாக்கப்பட்டது.

தற்பொழுது தெ.ம தொடருந்து மண்டலம் ஆறு கோட்டங்களை உள்ளடக்கியுள்ளது அவை, செகந்திராபாத், விசயவாடா, ஹைதராபாத், குண்டக்கல், குண்டூர், நாந்தேடு.

இந்திய இரயில்வேயின் அதிக லாபம் சம்பாதிக்கும் வடக்கு தொடருந்து மண்டலத்திற்கு பின்பு இரண்டாவதாக தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் திகழ்கிறது, இதன் தற்போதைய இலாபம் 110₹ பில்லியன்.

சான்றுகள்

  1. "தெற்கு மத்திய தொடருந்து மண்டலம்". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.