இந்திய இருப்புப்பாதை நிதியறிக்கை

இந்திய இரும்புவழி நிதியறிக்கை என்பது இந்தியாவின் இரும்புப்பாதைப் போக்குவரத்தை கையாளும் இந்திய இரும்பூர்தித்துறையின்  வருடாந்திர நிதி நிலை அறிக்கை ஆகும். இதை இரயில்வே நிதியறிக்கை என்றும் குறிப்பிடுவர். இது ஒவ்வொரு ஆண்டும், இந்திய இரும்புவழி அமைச்சகத்தின் சார்பில் இரும்புவழி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

ஒவ்வொரு ஆண்டும், இந்திய ஒன்றியத்தின் நிதியறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாகத்தான் இரும்புவழி நிதியறிக்கை தாக்கல் செய்யப்படும். 

வரலாறு

ஆங்கிலேய இரும்புவழி பொருளியலறிஞரான வில்லியம் அக்வொர்த் தின்[1] தலைமையிலான 10 உறுப்பினர்களைக்கொண்ட, 1920-21 ஆண்டின் அக்வொர்த் குழுவின் பரிந்துரையான அக்வொர்த் அறிக்கை தான், இரும்புவழித்தடங்களின் மறுசீரமைப்பிற்கு வித்திட்டது. 1924-ல் இந்தியாவின் இரும்புவழி நிதிகள், அரசின் பொதுநிதியிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. இப்பழக்கம் இன்றும்கூட சுதந்திர இந்தியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. [2][3][4]

இரும்புவழி நிதியறிக்கையின் தாக்கல் முதன்முறையாக 24 மார்ச், 1994-ஆம் திகதியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. 2004-ஆம் ஆண்டிலிருந்து 2009-ன் மே மாதம் வரை, இரும்புவழி அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் தொடர்ச்சியாக ஆறு முறை இரும்புவழி நிதியறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார். 2009-ல், அவரின் பதவிக் காலத்தில்108 கோடிக்கான ($1.6 பில்லியன்) நிதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.[5]

2000ஆவது ஆண்டில், மம்தா பானர்ஜி, முதல் பெண் இரும்புவழி அமையச்சராக பதவியேற்றார். 2002ஆம் ஆண்டு, அவர் இரும்புவழி நிதியறிக்கையை தாக்கல் செய்தபோது, இரு வேறு மத்திய அரசுக் கூட்டணியில் (தே ஜ கூ மற்றும் ஐ மு கூ) அங்கம் வகித்த ஒரே பெண் இரும்புவழி அமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.

2014ஆம் ஆண்டின் இரும்புவழி நிதியறிக்கையில், இரும்புவழி அமைச்சரான டி. வி. சதானந்த கெளடா இந்தியாவின் முதல் புல்லெட் தொடருந்து மற்றும் 9 அதிவிரைவு இரும்புவழித் தடங்களை பற்றி அறிவித்தார். [6]

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள் 

  1. The London Gazette: (Supplement) no. 32188. p. 278. 11 January 1921.
  2. Powell Anstey, Vera (1952).
  3. Headrick, Daniel R (1988).
  4. Debroy, Bibek (6 March 2012).
  5. "Lalu announces some more trains".
  6. "Gowda's announces first bullet train between Mumbai-Ahmedabad".

மேலும் படிக்க 

வெளி இணைப்புகள் 

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.