சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி
சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி என்பது இந்தியாவில் இயக்கப்படும் விரைவு வகைத் தொடர்வண்டியாகும். இதை இந்திய இரயில்வே இயக்குகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலுள்ள நகரங்களை அந்நாட்டின் தலைநகரான புது தில்லியுடன் இணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அதிவேகத் தொடர்வண்டிச் சேவையாகும்
வண்டிகள்
முதன்முதலாக 8 பெப்ரவரி 2004 இல் கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டிச் சேவை தொடங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில் 49 சம்பர்க் கிராந்தி வண்டிகள் இயங்குகின்றன.[1]
பெயர் | வழித்தடம் | தொலைவு (கிமீ) |
---|---|---|
ஆந்திரப் பிரதேச சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுத்தீன் - திருப்பதி | 2302 |
உத்தரப் பிரதேச சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுத்தீன் - கடி மாணிக்பூர் | 695 |
உத்தர சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | புது தில்லி - உதம்பூர் | 630 |
உத்தராகண்டு சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | தில்லி சந்திப்பு - காட்கோதாம் ராமநகர் | 239, 278 |
ஒடிசா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | புது தில்லி - புவனேஸ்வர் | 1799 |
கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுத்தீன் - யஸ்வந்தபூர் | 2610 |
கேரள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | சந்தீகட் - கொச்சுவேளி | 3415 |
குஜராத் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுத்தீன் - அகமதாபாத் | 1085 |
கோவா சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் | சண்டிகர் - மட்காவ் | 2160 |
சத்தீஸ்கட் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுத்தீன் - துர்க் | 1281 |
ஜார்க்கண்டு சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | புது தில்லி - ராஞ்சி | 1306 |
தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுத்தீன் - மதுரை | 2676 |
மேற்கு வங்காள சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | தில்லி சந்திப்பு - சியால்தாஹ் | 1448 |
பூர்வோத்தர் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | புது தில்லி - குவகாத்தி | 1904 |
பிகார் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | புது தில்லி - தர்பங்கா சந்திப்பு | 1172 |
மத்தியப் பிரதேச சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுத்தீன் - ஜபல்பூர் | 909 |
மகாராஷ்டிரா சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | ஹசரத் நிசாமுத்தீன் - பாந்திரா முனையம் | 1366 |
ராஜஸ்தான் சம்பர்க் கிராந்தி விரைவுவண்டி | தில்லி சராய் ரோகில்லா - ஜோத்பூர் சந்திப்பு | 685 |
சான்றுகள்
- "Sampark Kranti Express Train". பார்த்த நாள் 17 சூன் 2013.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.