தபதி ஆறு

தபதி ஆறு (குசராத்|તાપ્તી, இந்தி ताप्ती ) , பழைய பெயர் தாபி ஆறு (செங்கிருதம்|तापी), மத்திய இந்தியாவில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பேதுல் பகுதியில் தோன்றி குசராத் மாநிலத்தின் வழியே அரபிக் கடலில் கலக்கிறது. தீபகற்ப இந்தியாவில் ஓடும் முக்கிய நதிகளில் 724 கிமீ நீளமுள்ள இந்த ஆறு ஒன்றாகும்.கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் மூன்றே நதிகளில் இதுவும் ஒன்றாகும்.மற்றவை நர்மதா ஆறு மற்றும் மாகி ஆறு.

தபதி ஆறு

மத்தியப் பிரதேசம்மாநிலத்தின் தென்பகுதியில் கிழக்கு சாத்புரா மலைத்தொடரில் தொடங்கி,மேற்கே ஓடி பின்னர் மேற்கில் திரும்பி, மத்தியப் பிரதேசத்தின் நிமார் பகுதியை நிரப்பி, மகாராட்டிரத்தின் காந்தேஷ் மற்றும் கிழக்கு விதர்பா பகுதிகளில் பாய்ந்து தெற்கு குசராத்தின் சூரத் மாவட்டத்தின் வழியே சென்று காம்பத் வளைகுடா(முந்தைய காம்பே வளைகுடா) பகுதியில் அரபிக் கடலில்கலக்கிறது. தக்காண பீடபூமியின்முடிவில் தென்னிந்தியாவின் எல்லையாக இந்த நதியும் இதன் இணையான நர்மதா நதியும் விளங்குகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையின் சகயாத்ரி மலைத்தொடர் இந்நதியின் தெற்கே குசராத், மகாராட்டிர எல்லையில் தொடங்குகிறது.

பெயர் காரணம்

தபதி நதி பேதுல் மாவட்டத்தில் மூல்தாய் என்றவிடத்தில் தொடங்குகிறது. இது மூல்தாபி என்பதிலிருந்து திரிந்தது.தாபியின் மூலம் அல்லது தாபியின் ஆரம்பம் என பொருள் கொள்ளலாம். இந்து தொன்மவியல்படி தபதி கதிரவன் சூரியனின் மகளாவாள்.
மேலதிக தகவலாக தாய்லாந்து நாட்டில் ஓடும் யின் பெயர் ஆக.1915இல் இந்தியாவில் ஓடும் இந்நதியின் பெயரிலேயே வைக்கப்பட்டுள்ளது.

ஆற்று படுகையும் துணையாறுகளும்

தபதி ஆற்றுப் படுகை 65,145 கிமீ² பரப்புடையது. இதில் மகாராட்டிரத்தில் 51,504 கிமீ², மத்தியப் பிரதேசத்தில் 9,804 km² மற்றும் குசராத்தில் 3,837 கிமீ²ஆகும்.

பாசன மாவட்டங்கள்:

  • மகாராட்டிரம்: அமராவதி,அகோலா,புல்தானா,வாசிம்,ஜல்காவ்ன்,துலே,நந்தர்பார்,நாசிக்
  • மத்தியப் பிரதேசம்:பேதுல்,பர்ஹான்பூர்
  • குசராத்: சூரத்


பெரிய துணையாறுகள்: பூர்ணா, கிர்னா,பான்சரா,வாகுர்,போரி நதி,அனேர் நதி

ஆவலூட்டும் இடங்கள்

நதியின் வழிவரும் முக்கிய இடங்கள்: மத்தியப் பிரதேசத்தில் மூல்தாய் (பேதுல்), பர்ஹான்பூர், மகாராட்டிரத்தில் புசாவல், குசராத்தில் சூரத். மகாராட்டிரத்தில் ஜல்காவ்ன் மாவட்டத்தில் ஹத்னூர் அணையும் குசராத் சோனாகாத்தில் உகை அணையும் குறிப்பிடத்தக்கவை.

அமராவதி மாவட்டத்தில் மேல்காட் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பர்ஹான்பூரில் அசீர்கர் கோட்டை,ஜல்காவ்ன் சங்க்தேவ்மகராஜ் ஆலயமும் காணத்தக்கவை.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.