ஜயந்த் நாரளீக்கர்
ஜயந்த் விஷ்ணு நாரளீக்கர் (Jayant Vishnu Narlikar, பிறப்பு: சூலை 19, 1938), ஒரு இந்திய வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். நிலை மாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், ஃபிரெட் ஹாயிலுடன் இணைந்து ஹாயில்-நாரளீக்கர் கோட்பாட்டை உருவாக்கினார்.
ஜயந்த் நாரளீக்கர் | |
---|---|
பிறப்பு | 19 சூலை 1938 கோலாப்பூர், இந்தியா |
வாழிடம் | பூனா,இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | வானியற்பியல்,இயற்பியல், அண்டவியல் |
பணியிடங்கள் | கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா நிலையம் பல்கலைக்கழகங்களுக்கிடையான வானியல், வானியற்பியல் மையம் |
கல்வி கற்ற இடங்கள் | பனாரசு இந்து பல்கலைக்கழகம் கேம்பிரிட்சு பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | ஃபிரெட் ஹாயில் |
அறியப்படுவது | நிலை மாறா அண்டவியல் |
வாழ்க்கைச் சுருக்கம்
சூலை 19, 1938 - ஆம் ஆண்டு மகாராசுடிரத்தில் உள்ள கோலாப்பூரில் பிறந்தார் நருலிகர். அவரது தந்தை விஷ்ணு வாசுதேவ நருலிகர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் கணிதத்துறைத் தலைவராக இருந்தார். அவரது தாயார் சுமதி நருலிகர் சமசுகிருதப் புலவராக இருந்தார். பனாரசு இந்து பல்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்ற சயந்து, பிறகு கேம்பிரிட்சு சென்றார்[1].
படிப்பு
கேம்பிரிட்சில் பல்வேறு பட்டங்களை கணிதத்துறையில் பெற்றார்.
- இளங்கலை (B.A.) - 1960
- முனைவர் பட்டம் (Ph.D) - 1963
- முதுகலை (M.A.) - 1964
- (Sc.D.) - 1976 [1]
இருப்பினும் சிறப்புத்துறையாக அவர் தேர்ந்தெடுத்தது வானியலையும் வானியற்பியலையும் தான்.
அண்மைக்கால ஆராய்ச்சி
41 கி.மீ. உயரத்தில் மீவளி மண்டலத்தில் (Stratosphere) நுண்ணுயிரிகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றின் மூலம் பற்றிய ஆய்வு செய்த குழுவுக்கு தலைமையேற்று வழி நடத்தினார் நருலிகர்.[2]
பெற்ற விருதுகள்
- பத்ம பூசண் விருது (1965)
- ராசுட்ரா பூசண் (1981)-எப்.அய்.ஈ அறக்கட்டளை, இச்சால்கரஞ்சி.
- இந்திய தேசிய அறிவியல் அகாதமி வழங்கிய இந்திரா காந்தி விருது (1990)
- யுனெசுகோ வழங்கிய காளிங்கா பரிசு (1996)
- பத்ம விபூசண் விருது (2004)
- மகாராட்டிர பூசண் விருது (2010)
- சாகித்ய அகாதமி விருது (தன் வரலாறு, மராத்தி நூலுக்காக) (2014)