சொல் அணி

சொல் அணி ஆறு வகைப்படும். அவையாவன: எதுகை, மோனை, சிலேடை, மடக்கு, பின்வருநிலை, அந்தாதி

எதுகை

செய்யுளில் அல்லது வசனத்தில் இரண்டாவது எழுத்து ஒழுங்கு படத் தொகுக்கப் பட்டிருப்பது. அல்லது செய்யுட் சீர்களின் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது.
உதாரணம்

ட்டகத்தைக் கட்டிக்கோ
கெட்டியாக ஒட்டிக்கோ
ட்ட வட்டப் பொட்டுக்காரி

மோனை

செய்யுளில் அல்லது வசனத்தில் முதலாவது எழுத்து ஒழுங்கு படத் தொகுக்கப்பட்டிருப்பது.
உதாரணம்

ட்டோடு குழலாட
ண்ணென்ற மீன் ட ஆட
பொட்டோடு கையாட ஆட
பெண்ணென்ற நீயாடு ஆடு


சிலேடை

ஒரு சொற்றொடரை வேறு வேறு இடங்களில் பிரிக்கும் போது வேறு வேறு பொருள் தருவது.
உதாரணம்

ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலைதனுக்கு நாணாது
இச் செய்யுளில்
ஒரு கருத்து:
நாய் ஓடும். இருக்கும். அதன் வாயின் உட்பக்கம் வெள்ளையாக இருக்கும். சாப்பாட்டை நாடும்.
குலைப்பதற்கு நாணாது என்று வரும்.

மறு கருத்து

தேங்காய்க்கு ஓடு இருக்கும். உட்பக்கம் வெள்ளையாக இருக்கும்

குலை போட நாணாது. நாடும்- மனிதர்களால் விரும்பப் படும் என்று வரும்.

இங்கு ஒரு செய்யுள் இரு வேறு பொருள்களைத் தருகிறது.
தனியாக ஒரு சொல்லைப் பார்க்கும் போது

அறிவில்லாதவன்

அறிவில்+ஆதவன்
அறிவு+இல்லாதவன் என இருபொருள்களைத் தருகின்றன.

மடக்கு

ஒரு சொற்றொடரில் தொடர்ந்து வரும் சொல் ஒன்றாக இருக்கும். ஆனால் பொருள் வேறுபடும்.
உதாரணம்

அரவம் அரவம் அறியுமா?
இதன் பொருள்
பாம்பு சத்தம் அறியுமா.
ஒரு அரவம் பாம்பையும், ஒரு அரவம் சத்தத்தையும் குறிக்கின்றது.

பின்வருநிலை

ஒரே சொல் அடுத்தடுத்து ஒரே பொருளில் வருவது
உதாரணம்

நோய் எல்லாம் நொய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டுபவர் இதன் பொருள்:
துன்பம் இல்லாமல் வாழ விரும்புகின்றவர் துன்பம் செய்ய மாட்டார். ஏனெனில் அத் துன்பம் செய்வோரையே சாரும் என அறிந்துள்ளனர்.
இங்கு நோய் என்பது துன்பத்தைக் குறிக்கிறது.

நோய் என்ற ஒரே சொல் மீண்டும் மீண்டும் அதே பொருளில் வருகிறது.

அந்தாதி

பாடலில் ஒரு வசனத்தில் முடியும் சொல் அடுத்த வசனத்தில் தொடக்கமாக வருவது.
உதாரணம்

வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமனவன் மலர்க்கணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.