மடக்கு

மடக்கு என்பது செய்யுளில் தொடை அமைக்கும் பாங்குகளில் ஒன்று,
இது அணி வகையில் மடக்கணி எனவும் யாப்பு வகையில் யமகம் எனவும் பெயர் பெறும்.
திரிபு என யாப்பு வகையாலும், திரிபணி என அணி வகையாலும் பெயர் பெற்ற மற்றொரு வகையும் உண்டு.
இந்த வகைப் பாடல்களைப் பாடிப் புலமை விளையாட்டு விளையாடிச் சில புலவர்கள் தம் சொல்வளத்தைப் புலப்படுத்துவர்.

15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் மடக்கணி என்னும் சொல்லணி வகைப் பாடலால் கந்தர் அந்தாதி என்னும் நூலில் தன் புலமையை வெளிப்படுத்தியிருப்பதை இங்குக் காணலாம்.
பழனிமலை முருகனைப் போற்றும் பாடல்கள் சில.[1]

அடிக்குறிப்பு

  1. திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
    திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
    திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
    திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே. 1

    பொருள்
    திருவாவினன்குடியைப் பங்கு போட்டுக் கொண்டவர்.
    எண்ணத் தக்க அழகிய வாவிகள் நிறைந்த நல்ல ஊரில் வாழ்பவர்.
    பரங்குன்று, திருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்றுதோறாடல் படைவீடுகளிலும் சென்று குடிகொள்ளும் திரு ஆவி (ஆவியர்) குடிமக்கள் வாழும் தண்ணிய கார்முகில் பொழியும் மலையின் பெயரைச் சொல்லிப் பயனடையுங்கள்.

    செப்புங் கவசங் கரபா லகதெய்வ வாவியம்பு
    செப்புங் கவசங் கரிமரு காவெனச் சின்னமுன்னே
    செப்புங் கவசம் பெறுவார் கணுந்தெய்வ யானைதனச்
    செப்புங் கவசம் புனைபுயன் பாதமென் சென்னியதே. 2

    செவ்வந்தி நீலப் புயமுரு காபத்தர் சித்தமெய்யிற்
    செவ்வந்தி நீலத்தை யுற்றருள் வாய் திங்கட் சேய்புனைந்த
    செவ்வந்தி நீலத் தொருபாகர் போன்ற தினிச்சிந்தியார்
    செவ்வந்தி நீலத்தி னீடுமுற் றாத திமிரமுமே. 6

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.